மெட்ரோ, ரெயில்டெல் நிறுவனங்களில் வேலை

பெங்களூரு மெட்ரோ மற்றும் ரெயில் டெல் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு:-

Update: 2018-08-14 06:28 GMT
பெங்களூரு மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் சுருக்கமாக பி.எம்.ஆர்.சி. என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த ரெயில்வே நிறுவனத்தில் ‘அசிஸ்டன்ட் எக்சிகியூட்டிவ் என்ஜினீயர்’ மற்றும் ‘அசிஸ்டன்ட் என்ஜினீயர்’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மொத்தம் 99 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் அசிஸ்டன்ட் எக்சிகியூட்டிவ் என்ஜினீயர் பணிகளுக்கு 31 இடங்களும், அசிஸ்டன்ட் என்ஜினீயர் பணியிடங்களுக்கு 68 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

சிவில் என்ஜினீயரிங் தொடர்பான பி.இ., பி.டெக் பட்டப்படிப்பு படித்தவர்கள் அசிஸ்டன்ட் எக்சிகியூட்டிவ் என்ஜினீயர் பணியிடங்களுக்கும், டிப்ளமோ என்ஜினீயரிங் அல்லது பி.இ., பி.டெக் படித்தவர்கள் அசிஸ்டன்ட் என்ஜினீயர் பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்கலாம்.

அசிஸ்டன்ட் எக்சிகியூட்டிவ் என்ஜினீயர் பணிக்கு 40 வயதுக்கு உட்பட்டவர்களும், அசிஸ்டன்ட் என்ஜினீயர் பணிக்கு 35 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம்.

விருப்பமும், தகுதியும் இருப்பவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி அனுப்ப வேண்டும். விண்ணப்பம் 31-8-2018-ந் தேதிக்குள் பெங்களூரு, மெட்ரோ ரெயில் நிறுவன முகவரியை சென்றடையும்படி அனுப்ப வேண்டும். விரிவான விவரங்களை www.bmrc.co.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். 

மேலும் செய்திகள்