சாலைமறியலில் ஈடுபட்ட திராவிடர் விடுதலை கழகத்தினர் 55 பேர் கைது

புதுவையில் சாலைமறியலில் ஈடுபட்ட திராவிடர் விடுதலை கழகத்தினர் 55 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-08-13 23:45 GMT

புதுச்சேரி,

மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தியை தமிழக போலீசார் கைது செய்ததற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்த நடவடிக்கைக்கு புதுச்சேரியில் திராவிடர் விடுதலை கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர். அதன்படி நேற்று காலை காமராஜர் சிலை அருகே அவர்கள் கூடினார்கள்.

அப்போது திருமுருகன் காந்தியை கைது செய்ததை கண்டித்து கோ‌ஷங்களை எழுப்பினார்கள். தொடர்ந்து அவர்கள் சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு திராவிடர் விடுதலை கழக தலைவர் லோகு.அய்யப்பன் தலைமை தாங்கினார். இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட லோகு.அய்யப்பன், மக்கள் வாழ்வுரிமை இயக்க ஜெகநாதன், தமிழர் களம் அழகர் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் 55 பேரை போலீசார் கைது செய்தனர். அனைவரும் சிறிது நேரம் கரிக்குடோனில் தங்க வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்