அச்சரப்பாக்கத்தில் அதிகாலையில் டி.டி.வி.தினகரன் கட்சி நிர்வாகி வெட்டிக்கொலை
அச்சரப்பாக்கத்தில் அதிகாலையில் டி.டி.வி.தினகரன் கட்சி நிர்வாகியை 6 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டி கொன்றது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
அச்சரப்பாக்கம்,
காஞ்சீபுரம் மாவட்டம், அச்சரப்பாக்கம் காந்தி நகரை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 37). டி.டி.வி.தினகரன் ஆதரவாளரான பாலமுருகன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக அச்சரப்பாக்கம் நகர செயலாளராக இருந்தார். அச்சரப்பாக்கத்தில் டீக்கடை நடத்தி வந்தார்.
பாலமுருகன் நேற்று அதிகாலை தன்னுடைய டீக்கடையை திறந்தார். சிறிது நேரத்தில் 6 பேர் கொண்ட கும்பல் முகத்தில் துணியால் மூடிக்கொண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்தனர். அவர்கள் பாலமுருகனை கத்தி, அரிவாளால் வெட்டினர்.
வெட்டுக்காயங்களுடன் உயிர் பிழைக்க ஓடிய பாலமுருகன் பக்கத்தில் உள்ள தன்னுடைய சித்தப்பா ஏழுமலையின் டீக்கடையில் புகுந்து கதவை இழுத்து மூடிக்கொண்டார். அந்த மர்ம கும்பல், ஏழுமலையின் கழுத்தில் கத்தியை வைத்து கதவை திறந்து பாலமுருகனை வெளியில் இழுத்து வந்தனர்.
பின்னர் மீண்டும் நடுரோட்டில் வைத்து அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். எனினும் திரும்பி வந்த மர்ம கும்பல் இறந்த கிடந்த பாலமுருகனின் உடலில் பல இடங்களில் வெட்டி விட்டு தப்பியோடினர்.
இச்சம்பவம் அறிந்த அச்சரப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேந்திரகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் பாலமுருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றி தகவல் அறிந்த டி.டி.வி.தினகரன் கட்சி நிர்வாகிகள் வாசுதேவன், கோதண்டபாணி, சங்கர், உத்தமன் உள்பட பலர் அங்கு திரண்டு வந்தனர்.
இதையடுத்து அங்கு அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க மதுராந்தகம் போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) கந்தன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அப்பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன.
இதனிடையே இச்சம்பவம் தொடர்பாக பாலமுருகனின் உறவினரான மகேஷ் (37) என்பவரை பிடித்து போலீஸ் விசாரித்தனர். விசாரணையில் மணிகண்டன் (24), ஷாஜகான் (20), தீனா என்கிற தினகரன் (23), இளங்கோ (24), பிரகாஷ் (24), இம்ரான் (20) ஆகியோர் பாலமுருகனை வெட்டிக்கொன்றது தெரியவந்தது. இதையடுத்து 6 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
காந்திநகர் கோவில் திருவிழா நடத்துவது சம்பந்தமாக மகேஷ் உள்ளிட்ட சிலருடன் பாலமுருகனுக்கு தகராறு ஏற்பட்டு உள்ளது. எனவே முன்விரோதத்தில் பாலமுருகன் கொல்லப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.