குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் திரண்டு வந்த பெண்கள் கலெக்டரிடம் மனு
நாமக்கல் அருகே உள்ள பொட்டணம்புதூர் கிராமத்தை சேர்ந்த பெண்கள் காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகம் திரண்டு வந்து, சீரான குடிநீர் வழங்கக்கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
நாமக்கல்,
நாமக்கல் அருகே உள்ள பொட்டணம் ஊராட்சிக்கு உட்பட்டது பொட்டணம் புதூர் கிராமம். இப்பகுதியை சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகம் வந்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஆசியா மரியத்திடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். பின்னர் அவர்கள் கூறியிருப்பதாவது:-
பொட்டணம்புதூர் கிராமத்தில் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் கிராமத்தில் பொது குடிநீர் தொட்டியில் காவிரி நீர் நிரப்பப்பட்டு, பொதுமக்களுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. 4 நாட்களுக்கு ஒரு முறை மிகவும் குறைவான அளவே குடிநீர் வினியோகம் செய்வதால் அந்த தண்ணீர் போதுமானதாக இல்லை.
மேலும், தண்ணீர் தேவைக்காக ஏற்கனவே அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றிலும் மோட்டார் வேலை செய்வது இல்லை. இதனால் ஒரு குடம் குடிநீரை ரூ.7 கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகிறோம். எனவே எங்கள் பகுதிக்கு சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.