பெண்ணிடம் ரூ.4 லட்சம் மோசடி கலெக்டர் அலுவலகத்தில் புகார்
தர்மபுரியை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ (வயது 48). இவர் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் மனு அளித்தார்.
தர்மபுரி,
தர்மபுரியை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ (வயது 48). இவர் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் மனு அளித்தார். அதில், தர்மபுரியில் காப்பீட்டு முகவராக பணிபுரிந்தேன். எனது மகனை வெளிநாட்டில் படிக்க வைக்க ரூ.1 கோடிக்கு காப்பீட்டு பாலிசி எடுக்க முடிவு செய்து அதற்காக ரூ.7½ லட்சத்தை செலுத்த அதிகாரி ஒருவரிடம் நிரப்பபடாத காசோலையை வழங்கினேன். அந்த காசோலையை பாலிசி எடுக்காமல் என் வங்கி கணக்கில் இருந்து வேறு நபர்களுக்கு பரிமாற்றம் செய்து ரூ.4 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இந்த மோசடியில் பெண் ஊழியர் ஒருவருக்கும் தொடர்பு உள்ளது. இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.