நாளை முதல் புறநகர் ரெயில்களின் நேரம் மாற்றம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு

சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு இயங்கும் புறநகர் ரெயில்களின் நேரங்கள் நாளை முதல் மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்து உள்ளது.;

Update: 2018-08-14 00:15 GMT
சென்னை, 

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாளை(புதன்கிழமை) முதல் பல புறநகர் ரெயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

சென்னை மூர்மார்க்கெட்டில் இருந்து இரவு 8.10 மணிக்கு அரக்கோணம் செல்லும் ரெயில் (விரைவு) 10 நிமிடங்கள் முன்பாக புறப்பட்டு செல்லும். மூர்மார்க்கெட்டில் இருந்து இரவு 8 மணிக்கு திருவள்ளூர் செல்லும் ரெயில் 10 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு செல்லும். சென்னை கடற்கரையில் இருந்து அதிகாலை 5.35 மணிக்கு திருவள்ளூர் செல்லும் ரெயில் 15 நிமிடங்கள் முன்பாக புறப்பட்டு செல்லும். கடற்கரையில் இருந்து அதிகாலை 4.40 மணிக்கு வேளச்சேரி செல்லும் ரெயில் 10 நிமிடங்கள் முன்பாக புறப்பட்டு செல்லும்.

இதே போன்று, வேளச்சேரியில் இருந்து அதிகாலை 5.30 மணிக்கு திருவள்ளூர் செல்லும் ரெயில் 10 நிமிடங்கள் முன்பாக புறப்பட்டு செல்லும். திருவள்ளூரில் இருந்து காலை 8.15 மணிக்கு மூர்மார்க்கெட்டுக்கு புறப்படும் ரெயில் 5 நிமிடங்கள் தாமதமாக புறப்படும். அரக்கோணத்தில் இருந்து மூர்மார்க்கெட்டுக்கு அதிகாலை 4.40 மணிக்கு, இரவு 8.25 மணிக்கு, இரவு 9.45 மணிக்கு புறப்படும் ரெயில்கள் 5 நிமிடங்கள் முன்பாகவும், இரவு 9.25 மணிக்கு புறப்படும் ரெயில் 15 நிமிடங்கள் முன்பாகவும் புறப்படும். அரக்கோணத்தில் இருந்து காலை 7.50 மணிக்கு வேளச்சேரிக்கு புறப்படும் ரெயில் 10 நிமிடங்கள் முன்பாக புறப்படும். மேலும் திருத்தணியில் மதியம் 1.15 மணிக்கு மூர்மார்க்கெட்டுக்கு புறப்படும் ரெயில் 35 நிமிடங்கள் முன்பாக மதியம் 12.40 மணிக்கு புறப்படும். திருத்தணியில் இருந்து மாலை 4.55 மணிக்கு மூர்மார்க்கெட்டுக்கு புறப்படும் ரெயில் 5 நிமிடங்கள் தாமதமாக புறப்படும்.

தாம்பரம் மார்க்கம்

காஞ்சீபுரத்தில் இருந்து காலை 10.56 மணிக்கு சென்னை கடற்கரைக்கு புறப்படும் ரெயில் 14 நிமிடங்கள் தாமதமாக புறப்படும். தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு காலை 11.10 மணிக்கு புறப்படும் ரெயில் 14 நிமிடங்கள் முன்பாக புறப்படும். செங்கல்பட்டில் இருந்து கடற்கரைக்கு காலை 11.43 மணிக்கு புறப்படும் ரெயில் 15 நிமிடங்கள் தாமதமாக புறப்படும். தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு காலை 11.58 மணிக்கு புறப்படும் ரெயில் 15 நிமிடங்கள் முன்பாக புறப்படும். செங்கல்பட்டில் இருந்து மதியம் 12.35 மணிக்கு கடற்கரைக்கு புறப்படும் ரெயில் 12 நிமிடங்கள் தாமதமாக புறப்படும். தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு மதியம் 12.47 மணிக்கு புறப்படும் ரெயில் 12 நிமிடங்கள் முன்பாக புறப்படும்.

செங்கல்பட்டில் இருந்து கடற்கரைக்கு அதிகாலை 4.35 மணிக்கு, மாலை 4.35 மணிக்கு புறப்படும் ரெயில்கள் 5 நிமிடங்கள் முன்கூட்டி புறப்படும். இதே போன்று, செங்கல்பட்டில் இருந்து, கடற்கரைக்கு காலை 10.50 மணிக்கு, காலை 11.50 மணிக்கு, இரவு 7 மணிக்கு புறப்படும் ரெயில்கள் 5 நிமிடங்கள் தாமதமாக புறப்படும். திருமால்பூரில் இருந்து கடற்கரைக்கு காலை 6.15 மணிக்கு, காலை 6.20 மணிக்கு புறப்படும் ரெயில்கள் முறையே 2 நிமிடங்கள் மற்றும் 5 நிமிடங்கள் தாமதமாக புறப்படும்.

தாம்பரம் வரை நீட்டிப்பு

ஞாயிற்றுக்கிழமைகளில் தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு காலை 8.50 மணிக்கு புறப்படும் ரெயில் 5 நிமிடங்கள் முன்பாக புறப்படும். கடற்கரையில் இருந்து தாம்பரத்துக்கு காலை 9.42 மணிக்கு புறப்படும் ரெயில் 3 நிமிடங்கள் தாமதமாக புறப்படும்.

சென்னை கடற்கரை-பரங்கிமலை(40021) ரெயில் தாம்பரம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த ரெயில் காலை 8.32 மணிக்கு கடற்கரையில் இருந்து புறப்பட்டு காலை 9.27 மணிக்கு தாம்பரம் வந்தடையும். மறுமார்க்கத்தில் இதே ரெயில்(40042) தாம்பரத்தில் இருந்து காலை 9.32 மணிக்கு புறப்பட்டு காலை 10.27 மணிக்கு கடற்கரை சென்றடையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்