கரும்புகள் ஏற்றி வந்த டிராக்டர் சாலையில் கவிழ்ந்து விபத்து

ஆலங்குடி கடைவீதி பகுதியில் டிராக்டர் வந்து கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையின் நடுவில் கவிழ்ந்தது.

Update: 2018-08-13 22:45 GMT
ஆலங்குடி,

ஆலங்குடி அருகே உள்ள நம்பன்பட்டியை சேர்ந்தவர் குமார் (வயது 25). இவர் ஒரு டிராக்டரில் நேற்று அளவுக்கு அதிகமாக கரும்புக்கட்டுகளை ஏற்றிக் கொண்டு அறந்தாங்கி நோக்கி சென்று கொண்டிருந்தார். ஆலங்குடி கடைவீதி பகுதியில் டிராக்டர் வந்து கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையின் நடுவில் கவிழ்ந்தது. அப்போது நாடியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மணிக்கண்டன் (34) வேகமாக வந்த டிராக்டரை பார்த்து அவர் வந்த மோட்டார் சைக்கிளிலிருந்து குதித்து உயிர் தப்பினார். இருப்பினும் மோட்டார் சைக்கிள் டிராக்டரின் சக்கரத்தில் சிக்கி சேதமடைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் சாலையில் கவிழ்ந்து கிடந்த டிராக்டரை பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின்னர் இதுகுறித்து டிராக்டர் ஓட்டி வந்த குமாரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்