சின்னமனூர் மாணிக்கவாசகர் கோவிலில் நடராஜர் சிலை திருட்டு

சின்னமனூர் மாணிக்கவாசகர் கோவிலில் நடராஜர் சிலை திருட்டு போனது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.;

Update: 2018-08-13 22:30 GMT
சின்னமனூர்,



சின்னமனூரில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சிவகாமி அம்மன் உடனுறை பூலாநந்தீஸ்வரர் கோவிலின் துணைக்கோவிலாக மாணிக்கவாசகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது புதிதாக 22 சென்டிமீட்டர் உயரமுள்ள பித்தளையால் ஆன நடராஜர் சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் கோவில் அர்ச்சகரான திருப்பதி(வயது62) பூஜையை முடித்துவிட்டு பார்க்கும் போது நடராஜர் சிலையை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சிலை காணாமல் போனது குறித்து கோவில் நிர்வாகிகளிடம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் அருட்செல்வன் சின்னமனூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலை திருட்டு குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்