வாய்க்காலை தூர்வார வலியுறுத்தி குளத்தில் இறங்கி பொதுமக்கள் போராட்டம்
குத்தாலம் அருகே வாய்க்காலை தூர்வார வலியுறுத்தி பொதுமக்கள், குளத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குத்தாலம்,
நாகை மாவட்டம், குத்தாலம் அருகே வில்லியநல்லூரில் பல்ல வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலில் இருந்து நெல்லடி வாய்க்கால், நடுக்கண்ணி வாய்க்கால், சென்னாங்கண்ணி வாய்க்கால் ஆகிய கிளை வாய்க்கால்கள் பிரிகின்றன. இதில் நெல்லடி வாய்க்கால் சிவன்கோவில் குளத்துக்கும், நடுக்கண்ணி வாய்க்கால் ஓமகுளத்துக்கும், சென்னாங் கண்ணி வாய்க்கால் நாஞ்சான்குளத்துக்கும் நீர் வழிப்பாதையாக உள்ளது.
இந்த பல்ல வாய்க்கால் கடந்த 25 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் இந்த ஆண்டும் காவிரி நீர் வில்லியநல்லூர் கிராமத்துக்கு வரவில்லை. தற்போது காவிரி பெருக்கெடுத்து ஓடும் நிலையிலும் வில்லியநல்லூர் கிராம மக்கள் தண்ணீரின்றி அவதிப்பட்டு வருகின்றனர். பல்ல வாய்க்காலை தூர்வாரக்கோரி பல்வேறு துறைகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனை கண்டித்து நேற்று வில்லியநல்லூர் கிராம மக்கள், ஓமகுளத்தில் இறங்கி போராட்டம் நடத்தினர். அப்போது உடனடியாக வாய்க்காலை தூர்வாரி குளங்களில் நீர் நிரப்ப வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், காவிரி உபரி நீரானது பல லட்சம் கனஅடி வீணாக கடலில் கலக்கிறது. ஆனால் பல்ல வாய்க்கால் தூர்வாரப்படாததால் பாசனத்துக்கு மட்டுமின்றி குடிநீர் ஆதாரத்துக்கு கூட எங்களுக்கு பயனளிக்கவில்லை. அனைத்து நீர் நிலைகளும் வறண்டு காணப்படு கிறது. பல ஆண்டுகளாக குளங்களில் நீர் இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் 90 அடிக்கு கீழ் சென்றுவிட்டது. இதுகுறித்து முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு, மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப் பணித்துறைக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குறைந்தபட்சம் குளங்களிலாவது நீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் கிராமமக்களை ஒன்றிணைத்து சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என்றனர்.