அனுமதியின்றி கண்மாயில் மணல் அள்ளும் மர்ம நபர்கள்: நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை
அனுமதியின்றி கண்மாயில் மணல் அள்ளும் மர்மநபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகங்கை,
தற்போது இந்த கண்மாயின் ஒடைமணலை மர்ம நபர்கள் அனுமதியின்றி இரவு நேரங்களில் அள்ளி செல்கின்றனர்.
இதனால் இந்த பகுதியில் விவசாயம் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர்கள் கூறிஉள்ளனர்.
சிவகங்கையை அடுத்த ஒக்கூர் புதூர் கிராம மக்கள், மாவட்ட கலெக்டர் லதா விடம் கொடுத்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-
சிவகங்கையை அடுத்த ஒக்கூர் புதூரில் மிக பழமையான புதுக்கண்மாய் உள்ளது.இந்த கண்மாய் மூலம் இந்த பகுதியில் சுமார் 250 ஏக்கர் நிலம் பாசன வசதிபெறுகிறது.