மானாமதுரை வைகையாற்றில் அரசு மணல் குவாரி தொடக்கம்: பொதுமக்கள் – அரசியல் கட்சியினர் எதிர்ப்பு இல்லாததால் பணிகள் மும்முரம்

மானாமதுரை அருகே வைகையாற்று பகுதியில் அரசு மணல் குவாரி பூஜையுடன் தொடங்கப்பட்டது. இப்பகுதி பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் எதிர்ப்பு இல்லாததால் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

Update: 2018-08-13 23:00 GMT

மானாமதுரை,

மானாமதுரை வைகை ஆற்றுப்படுகையில் வாகுடி, செய்களத்து£ர், தெ.புதுக்கோட்டை ஆகிய 3இடங்களில் அரசு மணல் குவாரி தொடங்க பொதுப்பணித்துறை சார்பில் திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள தொடங்கியது. முன்னதாக இந்த மணல் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் அனைத்து கட்சி சார்பில் பல்வேறு கண்டன ஆர்ப்பாட்டம், கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடந்தயி.

இதையடுத்து தெ.புதுக்கோட்டை வைகையாற்றுப் படுகையில் குவாரியை சுற்றியுள்ள இடங்களில் எந்தவித கூட்டுக்குடிநீர் திட்டம் இல்லை என்றும், இந்த குவாரியால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என கிராம மக்களிடம் அதிகாரிகள் விளக்கமளித்தனர். மேலும் அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு மணல் அள்ளப்படும் எனவும் அதிகாரிகள் தரப்பில் பொதுமக்களுக்கு எடுத்து கூறினர்.

இதையடுத்து அரசு சார்பில் இந்த மணல் குவாரிக்கான பணிகள் முதல் கட்டமாக தெ.புதுக்கோட்டையில் நேற்று காலை பூஜையுடன் தொடங்கப்பட்டு பணிகள் மும்முரமாக நடந்துவருகின்றன. பின்னர் இதுகுறித்து கனிம வளத்துறை உதவி செயற்பொறியாளர் சந்திரன் கூறியதாவது:– சிவகங்கை மாவட்டத்தில் அரசு மணல் குவாரி இல்லாததால் இந்த மாவட்டத்தில் ஏற்கனவே நடைபெற்று வந்த கட்டுமான பணிகள் மிகவும் கடுமையாக பாதிக்கப்படடது.

முதல் கட்டமாக தெ.புதுக்கோட்டையில் தற்போது அரசு மணல் குவாரி தொடங்கப்பட்டுள்ளது. இங்கு மணல் அள்ளப்பட்டு சிவகங்கை அருகே உள்ள காயாங்குளம் என்ற இடத்தில் பொதுப்பணித்துறை சார்பில் உள்ள குடோனுக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து ஆன்–லைன் மூலம் மணல் விற்பனை செய்யப்படும். பொது மக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் முன்பு இந்த பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட்டனர்.

தற்போது இந்த பகுதியில் இந்த மணல் குவரிக்கு எவ்வித எதிர்ப்பும் இல்லாததால் தற்போது இந்த குவாரி தொடங்கப்பட்டுஉள்ளது. இவ்வாறு அவர் கூறினார். மணல் குவாரி தொடக்க விழாவில் வருவாய்த்துறை சார்பாக தாசில்தார் சுந்தரராஜன், மானாமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமாணிக்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்