சந்திரயான்-2 விண்கலம் ஜனவரியில் விண்ணில் ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் பேட்டி
சந்திரயான்-2 விண்கலம் ஜனவரி மாதம் விண்ணில் ஏவப்படும் என்றும், 3 ஆண்டுகளில் 50 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த முடிவு செய்துள்ளோம் என்றும் இஸ்ரோ தலைவர் சிவன் கூறினார்.;
பெங்களூரு,
இந்திய விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) தலைவர் சிவன் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆண்டுக்கு 2 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம். வருகிற நவம்பர் மாதம் 30-ந் தேதி ஜிசாட்-11 செயற்கைகோளை ஏவ முடிவு செய்துள்ளோம். சந்திரயான்-2 விண்கலம் ரூ.800 கோடியில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த விண்கலத்தை அடுத்த ஆண்டு(2019) ஜனவரி மாதம் 3-ந் தேதி விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளோம். இது தவறினால் மார்ச் மாதத்திற்குள் விண்ணில் செலுத்துவோம். அது நிலவில் உள்ள கனிம வளங்கள், நீர் உள்ளிட்ட இதர பிற அம்சங்கள் குறித்து ஆய்வு செய்து தகவல்களை நமக்கு அனுப்பும்.
அந்த விண்கலம் நிலவில் 14 நாட்கள் செயல்படும். பொதுவாக அங்கு மாதத்தில் 14 நாட்கள் பகலும், அடுத்த 14 நாட்கள் இரவும் இருக்கும். பகலாக இருக்கும்போது மட்டுமே இந்த விண்கலம் தனது பணிகளை ஆற்றும். இரவு தொடங்கிவிட்டால் அந்த விண்கலம் பெரும்பாலும் செயல் இழந்துவிடும்.
அந்த விண்கலம் நிலவில் இறங்கியதும், அதன் ஒரு பகுதி நிலவை சுற்றிவரும். இன்னொரு கருவியான ரோவர் நிலவை சுற்றி ஆய்வு பணிகளை மேற்கொள்ளும். இந்த மூன்று பணிகளுமே மிக கடினமானவை ஆகும். இந்த பணிகளுக்காக இந்தியா முழுவதும் இருந்து விஞ்ஞானிகளை தேர்ந்தெடுத்து ஒரு குழு அமைத்துள்ளோம். அந்த குழு சந்திரயான்-2 விண்கலத்தை ஆய்வு செய்தனர். பின்னர் அதில் சில மாற்றங்களை செய்யுமாறு ஆலோசனை கூறியுள்ளனர்.
அடுத்த 3 ஆண்டுகளில் 50 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த முடிவு செய்துள்ளோம். அடுத்தடுத்து செயற்கைகோள்களை விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளதால், எங்களுக்கு இடைவெளி இன்றி பணிகள் தொடர்ந்து இருக்கும். ஜிசாட்-30, ஜிசாட்-31 ஆகிய செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்படுகின்றன. ஜிசாட்-29, ஜிசாட்-11 ஆகிய செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த உள்ளோம். அடுத்த ஆண்டு ஜிசாட்-20 தகவல் தொடர்பு செயற்கைகோளை அனுப்ப முடிவு செய்துள்ளோம்.
ஜிசாட்-19 செயற்கைகோள் ஏற்கனவே விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இது 100 ஜி.பி.பி.எஸ். இணையதள வேகம் கொடுக்கும். இது கிராமப்புற இந்தியாவில் தகவல்தொடர்பை ஏற்படுத்துவதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். இது பிரதமரின் டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு ஊக்கம் அளிப்பதாக இருக்கும்.
ஆதித்யா விண்கலம் அடுத்த ஆண்டு(2019) விண்ணில் ஏவப்படும். எஸ்.எஸ்.எல்.வி. என்ற சிறிய ரக ராக்கெட்டை அறிமுகம் செய்ய உள்ளோம். அது அடுத்த ஆண்டு செயல்பாட்டுக்கு வரும். அதற்கு குறைந்த செலவுதான் ஆகிறது. அதை உருவாக்க அதிகபட்சமாக 6 பேர் மட்டுமே போதும். அதில் சிறிய செயற்கைகோள்கள் அனுப்பப்படும். மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டுகள் 2019-ம் ஆண்டு வடிவமைத்து செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும். அந்த ராக்கெட்டுகள் தரையிறங்கும் சோதனைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இஸ்ரோவில் 8-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 30 நாட்கள் வரை பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளோம். இதன் மூலம் அவர்களிடையே விண்வெளி, அறிவியல் ஆய்வு குறித்த ஆர்வத்தை ஏற்படுத்த முடியும். இதுகுறித்து பிரதமரிடம் நாங்கள் எடுத்துச் சொன்னோம். அவர் அதை பாராட்டினார். ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தை பொதுமக்கள் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள். செயற்கைகோள்கள் விண்ணில் எவ்வாறு செலுத்தப்படுகின்றன என்பதை மக்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம் ஆகும். நாசாவை போல், செயற்கைகோளை விண்ணில் செலுத்தும்போதும், அதை காண மக்கள் அனுமதிக்கப்படுவார்கள். மாணவர்கள் சிறிய அளவில் செயற்கைகோள்களை உருவாக்கினால், அதை விண்ணில் செலுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்.
நாங்கள் விண்ணில் செலுத்திய ஜிசாட்-6ஏ தோல்வி அடைந்தது. அதில் நாங்கள் சில முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தவறிவிட்டோம். அதன்பிறகு புதிய செயற்கைகோள்களை செலுத்துவதில் சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளது. தற்போது ஏவ தயார் நிலையில் உள்ள செயற்கைகோள்களை ஆய்வுக்கு உட்படுத்தி வருகிறோம். சில சந்தேகங்கள் எழுந்ததால், கயானா ஏவுதளத்திற்கு அனுப்பப்பட்ட ஜிசாட்-11 செயற்கைகோளை திரும்ப பெற்று சோதனைக்கு உட்படுத்தி இருக்கிறோம்.
இஸ்ரோவை உருவாக்கியதில் முக்கிய பங்கு ஆற்றிய விக்ரம் சாராபாயின் நூற்றாண்டு விழா அடுத்த ஆண்டு(2019) இதே நாளில் தொடங்குகிறது. பிரபல விஞ்ஞானிகள் மூலம் 100 அறிவியல் சொற்பொழிவு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும். இதையொட்டி தேசிய மற்றும் சர்வதேச அளவில் விண்வெளி ஆய்வு குறித்த கருத்தரங்குகளை நடத்த இஸ்ரோ முடிவு செய்துள்ளது. விண்வெளி துறையில் ‘ஸ்டார்ட்அப்‘ நிறுவனங்களின் வசதிக்காக நாடு முழுவதும் 6 ‘இன்குபேசன்‘ மையங்கள் அமைக்கப்படும். நாடு முழுவதும் இஸ்ரோ அறிவுசார் மையங்கள், விண்வெளி கிளப்புகள் அமைக்கப்படும். கேம்பிரிட்ஜ் உள்பட பல்வேறு பல்கலைக்கழகங்களில் விக்ரம் சாராபாயின் இருக்கை அமைக்கப்படும்.
இவ்வாறு சிவன் கூறினார்.
முன்னதாக இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படும் விக்ரம் சாராபாயின் பிறந்த நாள் விழா இஸ்ரோ தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன், “இந்திய விண்வெளி திட்டங்களை உருவாக்கி கொடுத்ததில் விக்ரம் சாராபாய் மிக முக்கிய பங்காற்றினார். விண்வெளி ஆராய்ச்சியில் அவருடைய சாதனை அளப்பரியது. தொழில் அதிபரின் குடும்பத்தில் பிறந்த விக்ரம் சாராபாய், விண்வெளி ஆராய்ச்சியில் ஆர்வம் இருந்ததை அடுத்து அவர் இந்த துறைக்கு வந்தார். அப்போது பிரதமராக இருந்த நேருவுடன் பேசி இஸ்ரோ அமைக்க அவர் முயற்சி மேற்கொண்டார். விண்வெளி திட்டங்களுக்கு எல்லா அரசுகளும் ஆதரவு வழங்கி இருக்கின்றன. விக்ரம் சாராபாயின் கனவுகளை நனவாக்க நாம் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். அவரை பற்றி இன்றைய இளம் விஞ்ஞானிகள் நிறைய அறிந்துகொள்ள வேண்டும்“ என்றார்.
அதைத்தொடர்ந்து பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், “விக்ரம் சாராபாய் நூற்றாண்டு விழாவை அடுத்த ஆண்டு கொண்டாட முடிவு செய்துள்ளோம். ஆண்டு முழுவதும் அவருடைய நூற்றாண்டு விழாவை கொண்டாடுவோம். இந்த விழாவில் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொள்வார்கள். அவரது நினைவாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம்“ என்றார். முன்னதாக விக்ரம் சாராபாய் உருவச்சிலை திறக்கப்பட்டது.