சுதந்திர தினத்தன்று கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும் மாவட்ட கலெக்டர்கள் உத்தரவு
திருவள்ளூர் காஞ்சீபுரம் மாவட்டங்களில் சுதந்திர தினத்தன்று கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும் என்று கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- இந்திய சுதந்திர தினமான வருகிற 15-ந்தேதி (புதன் கிழமை) திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 526 ஊராட்சிகளிலும் அனைத்து ஊராட்சி ஒன்றிய தனி அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும். இந்த கூட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியை தடைசெய்தல், கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம், அந்தியோதயா இயக்கம், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல் குறித்தும், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், சுகாதார உறுதிமொழியை எடுத்துக்கொள்ளுதல், கழிவறையை கட்டி பயன்படுத்தும் பயனாளிகளுக்கு பாராட்டுக்களை தெரிவித்தல், தூய்மை கணக்கெடுப்பு ஊரகம், திறந்தவெளியில் மலம் கழித்தல் அற்ற ஊராட்சிகள், கழிவறை இல்லாதோர் விவரப்பட்டியல் சேகரித்தல், திறந்தவெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துரைத்தல், ஒருங்கிணைந்த சுகாதார வளாகம், பள்ளி கழிவறைகள் மற்றும் அங்கன்வாடி மைய கழிவறைகள், திடக்கழிவு மேலாண்மை திட்டம் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், மகளிர் திட்டம், முதல்-அமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம் 2018-19, பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம், ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்ட பணிகளின் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விவரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும்.
மேலும் இளைஞர் திறன் வளர்ப்பு பயிற்சி உறுதி மொழி மக்கள் அமைப்புகளில் மேற்கொள்வது குறித்து அறிவுறுத்துதல், பள்ளி செல்லா மற்றும் புலம் பெயர்ந்த குழந்தைகள் அனைவருக்கும் கல்வி இயக்கம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு போன்றவை குறித்து விவாதிக்கப்பட வேண்டும்.
மேலும் கிராமசபை கூட்டங்களுக்கு பிற துறைகளை சேர்ந்த அலுவலர்களையும் கலந்து கொள்ள செய்து அவர்களது துறைகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைக்க வேண்டும். இந்த கிராம சபை கூட்டத்தில் பெருவாரியான மக்கள் பங்கேற்கும் பொருட்டு கிராம ஊராட்சிகளில் முழுமையான அறிவிப்புகள் மற்றும் விளம்பரங்கள் செய்து சிறப்பான முறையில் கிராம சபை கூட்டத்தை நடத்திட அனைத்து ஊராட்சி ஒன்றிய தனி அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கிராம சபை கூட்ட ஏற்பாடுகளை கண்காணிக்கவும், பார்வையிடவும் ஊராட்சி ஒன்றிய அளவில் உதவி இயக்குனர் நிலையில் மண்டல அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 633 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும் என்று காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.