சாலையோரம் நின்ற கன்டெய்னர் லாரி மீது மினி லாரி மோதல்; ஒருவர் சாவு
காஞ்சீபுரம் அருகே சாலையோரம் நின்ற கன்டெய்னர் லாரி மீது மினி லாரி மோதியதில் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
காஞ்சீபுரம்,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் இருந்து அலுமினிய சாமான்களை ஏற்றிக்கொண்டு ஒரு மினி லாரி வேலூர் நோக்கி நேற்று அதிகாலை சென்று கொண்டிருந்தது.
காஞ்சீபுரத்தை அடுத்த சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை பொற்றாங்குளம் என்ற இடத்தில் செல்லும்போது திடீரென அங்கு சாலையோரம் நின்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது மினி லாரி மோதியது.
இதில் மினி லாரியில் அமர்ந்து வந்த வேலூர் மாவட்டம் கொசவன்பாக்கத்தை சேர்ந்த சங்கர் (வயது 40) என்பவர் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். மினிலாரியை ஓட்டி வந்த திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கொட்டைகிராமத்தை சேர்ந்த தாமோதரன் எந்தவித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். இது குறித்து தகவல் கிடைத்ததும், காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன் மேற்பார்வையில், பாலுச்செட்டிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.