இன்ஸ்பெக்டரின் ஜெயில் தண்டனையை ஐகோர்ட்டு உறுதி செய்தது

திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய காமராஜ்பாண்டியன் என்பவரின் ஜெயில் தண்டனையை ஐகோர்ட்டு உறுதி செய்தது.

Update: 2018-08-12 22:59 GMT

மதுரை,

திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிவர் காமராஜ்பாண்டியன். இவர் கடந்த 2002–ம் ஆண்டு அங்குள்ள தனியார் மதுபானக்கடையில் மாமூல் கேட்டுள்ளார். ஆனால் மாமூலாக லஞ்சப்பணம் கொடுக்க விரும்பாத கடை உரிமையாளர், இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்துள்ளார். அவர்கள் கொடுத்த அறிவுரையின்படி ரசாயன பவுடர் தடவிய 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நோட்டுகளை இன்ஸ்பெக்டர் காமராஜ்பாண்டியனிடம் கொடுத்தபோது, அவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த திண்டுக்கல் தலைமை குற்றவியல் கோர்ட்டு, அவருக்கு ஓராண்டு ஜெயில் தண்டனை விதித்தது. அதை எதிர்த்து அவர் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அவரது மனுவை விசாரித்த நீதிபதி ஏ.எம்.பஷீர்அகமது, கீழ்கோர்ட்டு வழங்கிய தண்டனையை உறுதி செய்தார். மேலும் காமராஜ்பாண்டியனை கைது செய்து ஜெயிலில் அடைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்