திருப்பரங்குன்றம் தொகுதியில் ரூ.7 கோடியில் 32 கிராமங்களில் வளர்ச்சிப்பணிகள்

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி 32 ஊராட்சிகளில் ரூ. 7 கோடியில் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

Update: 2018-08-12 22:50 GMT

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் கடந்த 2016–ம் ஆண்டு பொதுத் தேர்தல் நடந்தது. அதில் அ.தி.மு.க.வேட்பாளராக போட்டியிட்ட எஸ்.எம்.சீனிவேல் வெற்றி பெற்றதைக்கூட அறியாத நிலையில் திடீரென்று மரணம் அடைந்தார். இந்த நிலையில் 6 மாதத்தில் இந்த தொகுதியில் முதல் முறையாக 2016–ம் ஆண்டு நவம்பர் மர்தம் 19–ந் தேதி இடைத்தேர்தல் நடந்தது.

அதில் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு ஆளும் கட்சி வேட்பாளருக்கு வாக்களிங்கள் என்ற அ.தி.மு.க.வினரின் ஒட்டு மொத்தவர்களின்குரலும் ஒரே மாதிரியாக ஒலித்தது. அதில் அ.தி.மு.க.வை சேர்ந்த ஏ.கே.போஸ் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வானார். இதையடுத்து இடைத்தேர்தலின் வாக்குறுதிகள் நிறைவேறும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் இடைத்தேர்தல் முடிந்து கடந்த 1½ ஆண்டுகளாகியும் தேர்தல் வாக்குறுதிகள் ஒ ன்று கூட நிறைவேறவில்லை. மேலுமு வரலாற்றில் பெயர் சொல்லும் படியாக திருப்பரங்குன் றம் தொகுதிக்கு என்று பெரிய அளவில் திட்டப்பணிகள் நடக்கவில்லை பொதுவாக திரு ப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட 32 ஊராட்சிகளில் குடிநீர், தெருவிளக்கு, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதி செய்யப்படாத நிலையே நீடித்து வருகிறது. திருப்பரங்குன்றத்தில் காவேரி குடிநீர் வசதி திருப்பரங்குன் றம், திருநகர் பகுதியில் பாதாள சாக்கடை வசதி கூட இல்லாத நிலை உள்ளது.

இந்த நிலையில் இடைத்தேர்வில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வான ஏ.கே.போஸ் கடந்த 1–ந்தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதனால் இந்த தொகுதியில் 2–வது இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. முதல் இடைத்தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்படாத நிலையில் 2–வது இடைத்தேர்தலை சந்திக்கும் தருணத்தில் வாக்காளர்கள் கேள்விமேல் கேள்வி கேட்கக்கூடும் என்று அ.தி.மு.க.வட்டாரத்தில் கேள்வி எழுந்தது. இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியத்திலேயே திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் மட்டும் இருப்பாக பொது நிதி ரூ. 7 கோடிக்கு மேல் உள்ளது. அந்த நிதி கொண்டு அடிப்படை வசதியை செய்ய வேண்டும் என்று அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் அ.தி.மு.க.மேலிடத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அ.தி.மு.க. மேலிடம் உயர்அதிகாரிகளிடம் பல மாதங்களாக இருப்பாக உள்ள நிதியை கொண்டு தேர்தல் அறிவிப்புக்குமுன் கிராமங்கள் முழுவதுமாக வளர்ச்சித்திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட வேண்டும். அதற்காக தீவிர நடவடிக்கை வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது. இந்த நிலையில் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள்கொண்ட குழுவினர் திட்டப்பணிகளுக்கு மதிப்பீடு தயார் செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு அனுமதி கேட்டு அனுப்பி உள்ளனர். இதையடுத்து முதல்கட்டமாக 32 ஊராட்சிகளில் ரூ.7 கோடியில் 110–க்கும் மேற்பட்ட வேலைகள் செய்ய திட்டம் தயாராக உள்ளது. இந்நிலையில் சாலை அமைக்கும் பணியை காட்டிலும் குடிநீருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்