கருணாநிதி மறைவையொட்டி தி.மு.க.வினர் அமைதி ஊர்வலம் தொண்டர்கள் மொட்டையடித்து கண்ணீர் அஞ்சலி
கருணாநிதி மறைவையொட்டி அரியலூர் மாவட்டத்தில் தி.மு.க.வினர் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. மேலும் தொண்டர்கள் மொட்டையடித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
அரியலூர்,
தி.மு.க.வின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதி உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை உயிரிழந்தார். கருணாநிதி மறைவையொட்டி அரியலூர் மாவட்டத்தில் தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் மட்டுமில்லாமல் பொதுமக்களும் ஆழ்ந்த சோகத்தில் மூழ்கின. மேலும் அவர்கள் கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும், மலர்தூவியும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
மேலும் கருணாநிதி மறைவையொட்டி நேற்று அரசு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனால் அரியலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள், நிறுவனங்கள் திறக்கப்படவில்லை. மேலும் அரசு சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதோடு மட்டுமின்றி தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அரியலூர் மாவட்டத்தில் நேற்று சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. ஆட்டோ, கார், அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஓடவில்லை. அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறி, மருந்து கடைகள் என அனைத்து கடைகளும் மூடப்பட்டன. சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. அரியலூர் வழியாக சென்னை செல்லும் ரெயில்களில் பயணிகள் கூட்டம் நிறைந்து வழிந்தது. அரியலூர் நகரில் தி.மு.க. தொண்டர்கள் பல இடங்களில் கருணாநிதி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து கட்சி தொண்டர்கள் கருப்பு சட்டை அணிந்து செந்துறை சாலையிலிருந்து அரியலூர் பஸ் நிலையம், மார்க்கெட் தெரு, தேரடி, சின்னக்கடை தெரு, பெரியகடை தெரு, ரெயில் நிலையம், கல்லூரி சாலை வழியாக அமைதி ஊர்வலமாக சென்றனர். மாவட்டம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டது.
திருமானூர் அருகே உள்ள கீழகாவட்டாங்குறிச்சி மற்றும் கரைவெட்டியில் தி.மு.க. வினர் மொட்டையடித்து கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். கருணாநிதி மறைவையொட்டி திருமானூர் ஒன்றியத்தில் திருமானூர், கீழப்பழுவூர், ஏலாக்குறிச்சி, திருமழபாடி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கடைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டிருந்தன. பஸ்கள், லாரிகள் எதுவும் இயங்கவில்லை. பெட்ரோல் பங்க் குகள், வங்கிகள் மூடப்பட்டிருந்தன. தி.மு.க. கொடி அரைகம்பத்தில் பறக்க விடப்பட்டிருந்தன. திருமானூரில் அனைத்து கட்சி சார்பில் அமைதி ஊர்வலம் நேற்று நடைபெற்றது. திருமானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பிருந்து தொடங்கிய இந்த அமைதி ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக சென்று திருமானூர் பஸ் நிலையத்தை வந்தடைந்தனர். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதேபோல் ஆண்டிமடம் ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் ரெங்க முருகன் தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலம் ஆண்டிமடம் பஸ் நிலையத்தில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக ஆண்டிமடம் நான்கு ரோட்டிற்கு வந்தனர். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். வரதராஜன்பேட்டை, தென்னூர், கவரப்பாளையம் மற்றும் ஆண்டிமடம் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள தி.மு.க.வினர் கருணாநிதி உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.
கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நேற்று ஜெயங்கொண்டத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஜெயங்கொண்டம் கடைவீதி, பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டதால் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. மருந்து, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளும் அடைக்கப்பட்டது. அரசு மற்றும் தனியார் பஸ்களும் இயக்கப்படாததால் ஜெயங்கொண்டம் பஸ் நிலையம் வெறிச்சோடி இருந்ததை காண முடிந்தது.