அரசு ஊழியர்களின் 3 நாள் வேலை நிறுத்தம் தொடங்கியது அரசு பணிகள் பாதிப்பு

மராட்டியத்தில் அரசு ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, 3 நாள் வேலை நிறுத்த போரா ட்டத்தை தொடங்கினர். இதன் காரணமாக அரசு பணிகள் பாதிக்கப் பட்டன.

Update: 2018-08-07 23:30 GMT
மும்பை,

மராட்டியத்தில் 7-வது ஊதிய கமிஷன் அடிப்படையில் சம்பள உயர்வு வழங்கவேண்டும், ஓய்வுபெறும் வயதை 58-ல் இருந்து 60-ஆக உயர்த்த வேண்டும், வாரத்தில் 5 நாட்கள் பணி, காலியாக உள்ள 1 லட்சத்து 80 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் 3 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்த னர்.

அறிவித்தபடி நேற்று அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட் டனர்.

இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் மாநிலம் முழுவதும் அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரிபவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என 17 லட்சம் பேர் பங்கேற்று உள்ளதாக தெரிவிக்கப் பட்டன. இதன் காரணமாக நேற்று மாநில தலைநகர் மும்பை உள்பட மாநிலத்தின் அனைத்து இடங்களிலும் அரசு அலுவலகங்கள் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி காணப் பட்டன.

அரசு பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த நிலையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து இடங்களிலும் ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணா போராட்டங்களில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து இன்றும், நாளையும் அரசு ஊழியர் களின் வேலை நிறுத்தம் தொடர்ந்து நடைபெற உள்ளது. இதற்கிடையே வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ள ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்றும், இல்லையெனில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில அரசு எச்சரித்து உள்ளது.

மேலும் செய்திகள்