முன்னாள் படைவீரர்களுக்கு இலவச திறன் வளர்ச்சி பயிற்சி கலெக்டர் சந்தீப்நந்தூரி தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்களுக்கு இலவச திறன் வளர்ச்சி பயிற்சி வழங்கப்பட உள்ளதாக மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.;

Update: 2018-08-07 21:30 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்களுக்கு இலவச திறன் வளர்ச்சி பயிற்சி வழங்கப்பட உள்ளதாக மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;–

இலவச பயிற்சி 

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்களுக்கு இலவசமாக பல்வேறுபட்ட திறன் வளர்ச்சி பயிற்சி மாவட்ட திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் அளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த பயிற்சி மாவட்ட திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலம் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக வாகன பராமரிப்பு, எலக்ட்ரிசியன், டெக்னீசியன் வெல்டிங், பீல்டு டெக்னீசியன், டொமஸ்டிக், ஜூவல்லரி போன்ற 31 பிரிவுகளில் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி? 

எனவே இந்த பயிற்சிகளில் சேர விருப்பம் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தையோ, தூத்துக்குடி மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தையோ நேரில் அணுகி விண்ணப்ப படிவம் பெற்று விண்ணப்பிக்க வேண்டும். அல்லது http://www.tnskill.tn.gov.in என்ற இணையதளத்தில் நேரடியாக பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தையோ, முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தையோ தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்