வெண்பட்டுக்கூடு வளர்க்கும் தம்பதிகள் : பணத்தையும், பாராட்டையும் குவிக்கிறார்கள்
கடுகைவிட சிறிதான முட்டைக்குள் உருவாகி போராடி, புழுவாகி பின்னர் கூட்டுப்புழுவாய் தனக்குத்தானே சிறை வைத்துக்கொள்ளும் பட்டுப்புழுக்கள் பலருக்கு வாழ்வாதாரமாக இருக்கிறது.
பயிர்களை மட்டுமே வளர்த்து வந்த விவசாயிகள் இந்த உயிர்களையும் வளர்க்கத்தொடங்கி இருக்கிறார்கள். பட்டுப்புழு வளர்ப்பு இன்றைய நிலையில் லாபம் தரும் தொழிலாக மாறி இருக்கிறது.
கரும்புப்பயிர் பலன் கொடுக்க 10 மாதம் காத்திருக்கவேண்டும். வாழைமரம் பலன் கொடுக்க ஓராண்டு காத்திருக்க வேண்டும். தென்னை மரம் பலன்கொடுக்க பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். ஆனால் பட்டுப்புழு வளர்ப்பில் ஒரே மாதத்தில் பலன் கிடைக்கும் என்பதால் விவசாயிகள் பட்டுப்புழு வளர்ப்பில் ஆர்வம் காட்டுகிறார்கள்.
ஏரோட்டுவது முதல் அறுவடை வரை விவசாயத் தொழிலில் ஆண்கள் முதலாளிகளாகவும், பெண்கள் தொழிலாளர்களாகவும் இருக்கும்நிலையில் பெண் களை முதலாளியாக்கிப் பார்ப்பதில் முதலிடம் வகிப் பது பட்டு வளர்ப்புத்தொழில் என்றால் மிகையாகாது. குழந்தை வளர்ப்பை சிறப்பாக செய்யும் பெண்களுக்கு பட்டுப்புழு வளர்ப்பு எளிதாக இருக்கிறது. சுத்தமான சூழல், வேளைக்கு (மல்பெரி இலை) உணவு என பட்டுப்புழு வளர்ப்பிலும் குழந்தை வளர்ப்புக்கு இணையான பராமரிப்பு தேவைப்படுகிறது.
வெண்பட்டுக்கூடு உற்பத்தியில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. இதில் மாநிலத்திலேயே வெண்பட்டுக்கூடு உற்பத்தியில் முதன்மை விவசாயி என்ற பெருமையை பெற்றிருக்கிறார், திருப்பூர் மாவட்டம் குடிமங்கலத்தை அடுத்த ஆத்துக்கிணத் துப்பட்டியை சேர்ந்த பொன்ராஜ். தமிழக அரசின் ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு பெற்ற ஆனந்தத்தில் இருக்கும் அவரை, அவரது இல்லத்தில் சந்தித்தோம்.
ஊருக்கு சற்று வெளியே தென்னை மரங்களின் நடுவே இயற்கைச்சூழலில் அமைந்திருக்கிறது விவசாயி பொன்ராஜின் வீடு. வீட்டை சுற்றிலும் பச்சை பசேலென்ற மல்பெரித்தோட்டம். அதற்கு நடுவே குடில்கள் போன்று அமைத்து பட்டுப்புழு வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு நமது வாழ்த்துக்களை சொன்னதும், தனது மனைவி சுதாவை சுட்டிக்காட்டி “வாழ்த்துக்களை எல்லாம் அவருக்கு சொல்லுங்கள்” என்றார். 7-ம் வகுப்பு படிக்கும் மகள் பிரதிஷா மற்றும் 4-ம் வகுப்பு படிக்கும் சஷ்மிதாவுக்கு தட்டில் சாதத்தை வைத்துவிட்டு காய்கறிகள் சாப்பிடுவதன் முக்கியத்துவம் குறித்து விளக்கிக்கொண்டிருந்த சுதா புன்னகையுடன் நம்மிடம் பேசத்தொடங்கினார்.
“வாழ்க்கைத்துணை என்பவள் குடும்பத்தில் மட்டு மல்லாமல் தொழிலிலும் துணையாக நிற்க வேண்டியது மிகவும் அவசியம். எங்களுக்கு திருமண மான புதிதில் தென்னந்தோப்பு மட்டுமே இருந்தது. தண்ணீர் தட்டுப்பாடு போன்ற பல காரணங்களால் தென்னை விவசாயம் திணறிக்கொண்டிருந்த காலகட்டம். அப்போது மாற்றுத்தொழில் செய்யலாம் என்று யோசித்தபோது மாமனார் செய்த பட்டு வளர்ப்புத் தொழிலையே நாமும் ஏன் எடுத்து செய்யக்கூடாது என்றயோசனை வந்தது. என் கணவரிடம் சொன்னபோது தயங்காமல் 50-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை வெட்டிவிட்டு அதில் மல்பெரிச்செடிகளை நட்டு வைத்து தொழிலுக்கு பிள்ளையார் சுழிபோட்டார். அன்று முதல் இன்றுவரை பட்டுவளர்ப்பில் அவருக்கு உறுதுணையாக நிற்கிறேன். சின்னச்சின்ன உதவிகள் செய்கிறேனென்றாலும் என்னை முன்னிறுத்தி பெருமைப்படுத்துவது எனக்கு தொழிலில் புதிய உத்வேகத்தை அளிக்கிறது” என்கிறார், சுதா.
குறுக்கிட்டு பேசும் பொன்ராஜ், “சாதாரண விவசாயியாக இருந்த என்னை சாதனை விவசாயியாக மாற்றியதில் பெரும்பங்கு என் மனைவி யுடையது. அதே நேரத்தில் பட்டு வளர்ச்சித்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்பும், அரசு வழங்கும் திட்டங்களும் மிகவும் உறுதுணையாக உள்ளது. என் அப்பா பட்டு வளர்ப்புத் தொழில் செய்து வந்தார். அப் பொழுதெல்லாம் மஞ்சள்நிற பட்டுக் கூடுகள் தான் உற்பத்தி செய்யப்பட்டது. அதுமட்டுமல்லாமல் புழுக்கள் இறப்பு சதவீதம் அதிகமாக இருந்தது. அதே நேரத்தில் தற்போது உடுமலை சுற்றுவட்டாரப்பகுதிகளில் வெண் பட்டுக்கூடு உற்பத்தி அதிக அளவில் உள்ளது. வெண்பட்டுக்கூடு உற்பத்தி யில் தமிழகம் இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளது. தேசிய வெண் பட்டு உற்பத்தியில் 89 சதவீதம் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது.
அதிலும் உடுமலை சுற்றுவட்டாரப்பகுதிகளில் ஆண்டு முழுவதும் பட்டு உற்பத்திக்கேற்ற சீரான பருவ நிலை நிலவுவதால் வெண்பட்டு உற்பத்தி அதிக அளவில் நடைபெறுகிறது. எங்களது தோட்டத்தில் 3 ஏக்கர் மல்பெரி நடவு செய்து பராமரித்து வருகிறோம்.பொதுவாக கோழிக் கழிவு கள், மாட்டுச்சாணம் போன்ற இயற்கை உரங்களையே அதிக அளவில் பயன்படுத்துகிறோம். சொட்டு நீர்ப்பாசனம் மூலம் தண்ணீர் பாய்ச்சுவதால் மிகக் குறைந்த அளவு தண்ணீரே போதுமானதாக உள்ளது.
முட்டைத்தொகுதியில் இருந்து இளம்புழுக் களை உற்பத்தி செய்து பராமரிப்பது கடினம். அதனால் 5 நாட்கள் கொண்ட இளம்புழுக்களை இளம்புழு வளர்ப்பு பண்ணைகளில் இருந்து வாங்கி வளர்க்கிறோம். தரமான மல்பெரி இலை களை தோட்டத்திலிருந்து நாங்களே சேகரித்து பட்டுப்புழுக்களுக்கு உணவாகக் கொடுக்கி றோம். அவை 25 நாட்களில் பட்டுக்கூடுகளாக உரு மாறுகிறது.
தரமான ஒரு வெண்பட்டுக்கூட்டிலிருந்து 1200 மீட்டர் வரை பட்டுநூல் கிடைக்கிறது. மேலும் நவீன தொழில்நுட்பங்களை பயன் படுத்துவதாலும், முறையான பராமரிப்பு மேற்கொள்வதாலும் 100 முட்டைத்தொகுதிக்கு 90 கிலோ வரை மகசூல் கிடைக்கிறது. உடுமலை பகுதியில் உற்பத்தியாகும் வெண்பட்டுக்கூடுகள் சேலம், தர்மபுரி போன்ற வெளி மாவட்டங்கள் மட்டுமல்லாமல் கர்நாடக மாநிலம் ராம்நகர் மார்க்கெட்டுக்கு அதிக அளவில் கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. தரமான வெண்பட்டுக் கூடுகள் உற்பத்தி, அதிக மகசூல் போன்ற பல்வேறு விஷயங்களை ஆய்வு செய்து தமிழக அரசு சார்பில் ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு கிடைத்தது.
இந்த ஆண்டு முதல் தமிழக அளவில் சிறந்த பட்டு விவசாயிகளை தேர்வு செய்து முதல் பரிசாக ரூ.1 லட்சமும், 2-ம் பரிசாக ரூ.75 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் மாவட்ட அளவில் சிறந்த பட்டு விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ.25 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.20 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.15 ஆயிரமும் வழங்கப்பட்டுள்ளது. இதில் மாநில அளவில் முதல் பரிசு பெற்றது மிகவும் மகிழ்ச்சி அளித்தது. நாட்டின் முதுகெலும்பு என்று வர்ணிக்கப்படும் விவசாயிகளை மேடையேற்றி கவுரவிக்கும் இதுபோன்ற நிகழ்வுகள் வருங்காலத்தில் விவசாயிகளை ஊக்கப்படுத்து வதாக அமையும். தமிழக அரசுக்கும், பட்டு வளர்ச்சித் துறைக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள் கிறோம்” என்றார், பொன்ராஜ்.
இந்த தம்பதிகள் பட்டுக்கூடு உற்பத்தியால் பரிசையும், பாராட்டுகளையும் குவித்துக்கொண்டிருக் கிறார்கள்.