ஆப்பிள் வினிகர்
வயதானவர்கள் மட்டுமின்றி இளம் பருவத்தினரும் மூட்டுவலியால் அவதிப்படுகிறார்கள்.
உடலிலுள்ள எலும்பு மண்டல அமைப்பு பலவீனமாக இருப்பதே மூட்டுவலி பாதிப்புக்கு முக்கிய காரணம். ஒருசில உணவுப்பழக்கவழக்கங்களை கடைப்பிடித்துவந்தால் மூட்டுவலிக்கு இடம் கொடுக்காமல் பார்த்துக்கொள்ளலாம். ஆரம்பநிலையில் இருக்கும் மூட்டுவலி பிரச்சினைக்கும் நிவாரணம் பெறலாம். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்:
* ஆப்பிளில் இருந்து தயாரிக்கப்படும் வினிகர் மூட்டுவலியை குறைக்க உதவும். அதனுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து மூட்டு பகுதிகளில் தடவி மசாஜ் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இரவு தூங்க செல்வதற்கு முன்பு சிறிதளவு ஆப்பிள் வினிகருடன் தண்ணீர் சேர்த்தும் பருகிவரலாம்.
* இஞ்சியும் மூட்டு வலியை விரட்டியடிக்கும். இஞ்சியில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்யை தினமும் இரண்டு முறை மூட்டுகளில் தடவி வந்தால் மூட்டுவலி கட்டுப்படும். இஞ்சியை டீயாக தயாரித்தும் பருகிவரலாம். நீரில் இஞ்சியை கொதிக்க வைத்து, அந்த நீரை வடிகட்டி அதனுடன் தேன், எலுமிச்சை சாறு கலந்து ருசிக்கலாம்.
* இஞ்சியுடன் மஞ்சளை சேர்த்தும் பயன்படுத்தலாம். இரண்டையும் நீரில் கால் மணி நேரம் கொதிக்கவைக்க வேண்டும். பிறகு அந்த நீரை வடிகட்டி, அதனுடன் தேன், எலுமிச்சை சாறு கலந்து ருசிக்கலாம். பாலுடன் மஞ்சள் தூள், சர்க்கரை கலந்தும் இரவில் பருகிவரலாம். இவ்வாறு செய்தால் மூட்டுவலி கட்டுப்படும்.
* எலுமிச்சை சாறை நீரில் கலந்தோ, எலுமிச்சை டீயாகவோ தினமும் பருகிவரலாம். இது உடல் வளர்ச்சிதை மாற்றத்தையும் மேம்படு்த்தி வலிகளை குறைக்கும்.