பெண்களுக்கான படை

கர்நாடக மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் போலீஸ் துறையிலேயே தனிப்படை உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கு ‘ஒபாவ்வா படை’ என்று பெயர்.

Update: 2018-08-05 08:08 GMT
ஒபாவ்வா படையில் பிரத்தியேக பயிற்சி பெற்ற பெண் காவலர்கள் உள்ளனர்.

இந்த படையானது சரித்திர பின்னணி கொண்டது. சித்ரதுர்கா பகுதி மன்னர் காலத்தில் உருவாக்கப்பட்ட பெண்கள் படையின் பெயரும் ஒபாவ்வா என்பதுதான். தற்போது அதே பெயரில் நவீனப்படுத் தப்பட்டு பெண்கள் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தியும், பெண்களுக்கு எதிராக ஏற்படும் வன்முறைகளை கட்டுப்படுத்தும் நோக்கிலும் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதில் இடம்பெற் றுள்ள 45 இளம் பெண் போலீசாருக்கு உயர் போலீஸ் அதிகாரிகள் மூலம் 21 நாட்கள் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. மேலும் தற்காப்பு நுணுக்கங்களும் கற்றுக்கொடுக்கப்பட்டிருக்கிறது.

தற்போது ஒபாவ்வா படையில் ஐந்து குழுக்கள் உள்ளன. சித்ரதுர்காவில் இரண்டு குழுக்களும் ஹோலால்கேரே, சால்லாகேரே, ஹிரியூர் பகுதிகளில் தலா ஒரு குழுவும் இயங்கி வருகிறது. இந்த படையானது பெண்களை பிரச்சினைகளில் இருந்து காப்பாற்றுவ தோடு மட்டுமல்லாமல் பிரச்சினைகளில் சிக்காமல் இருப்பதற்கான விழிப்புணர்வையும் அளிக்கிறது.

சித்ரதுர்கா மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பெண்களிடம் போதுமான விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது. இந்த படையினரின் நடவடிக்கை மூலம் நல்ல மாற்றம் ஏற்பட தொடங்கி இருக்கிறது. முதல்கட்டமாக சோதனை முயற்சி அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ள இந்த படை பெண்கள் பாதுகாப்பிற்கான விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபடுவதோடு சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு பணிகளையும் மேற்கொள்கிறது. தற்போது ரெயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையங்களில் பணியாற்றி வருகின்றனர். 

மேலும் செய்திகள்