ஜூகுவில் பெண் டாக்டரை மானபங்கம் செய்த ஓட்டல் உரிமையாளர் கைது

ஜூகுவில் பெண் டாக்டரை மானபங்கம் செய்த ஓட்டல் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-08-04 23:00 GMT
மும்பை, 

ஜூகுவில் பெண் டாக்டரை மானபங்கம் செய்த ஓட்டல் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

பெண் டாக்டர் மானபங்கம்

மும்பை ஜூகுவில் தனஞ்சய் ஷெட்டி என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் இவருக்கு பெண் டாக்டர் ஒருவரின் அறிமுகம் கிடைத்தது. இந்த நிலையில், அவர் பெண் டாக்டருக்கு சமூக வலைத்தளத்தில் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

நேரிலும் அவரை சந்தித்த தனஞ்சய் ஷெட்டி அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இரண்டு முறை அவரது உடலில் தொடக்கூடாத இடங்களை தொட்டு மானபங்கம் செய்து உள்ளார்.

ஓட்டல் உரிமையாளர் கைது

மேலும் அவர் பெண் டாக்டரை உல்லாசத்துக்கு அழைத்து உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் டாக்டர் அவரை வன்மையாக கண்டித்தார். மேலும் சம்பவம் குறித்து ஜூகு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனஞ்சய் ஷெட்டியை நேற்றுமுன்தினம் கைது செய்தனர். சம்பவம் தொடர்பாக போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்