ரூ.10 ஆயிரத்தை, வங்கி மேலாளரிடம் ஒப்படைத்த கல்லூரி பேராசிரியர் தவற விட்டவர் யார்? போலீசார் விசாரணை
கும்பகோணத்தில் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த ரூ.10 ஆயிரத்தை கல்லூரி பேராசிரியர் ஒருவர் வங்கி மேலாளரிடம் ஒப்படைத்தார். அந்த பணத்தை தவற விட்டவர் யார்? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கும்பகோணம்,
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பாபுராஜபுரம் புளியஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்வேலன் (வயது38). இவருக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். செந்தில்வேலன் திருமங்கலக்குடியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
நேற்றுமுன்தினம் இவர் கும்பகோணம் ஆயிகுளம் சாலையில் உள்ள ஒரு தனியார் வங்கி ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றார். அப்போது அங்கு ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.10 ஆயிரம் பணம் எடுக்கப்படாமல் இருந்தது. அங்கு காவலாளியும் இல்லை. இதையடுத்து செந்தில்வேலன், ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு கும்பகோணம் மேற்கு போலீஸ் நிலையம் சென்றார். பின்னர் அந்த பணத்தை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் மற்றும் தனியார் வங்கியின் மேலாளர் ஹரிஹரன் ஆகியோரிடம் ஒப்படைத்தார்.
ஏ.டி.எம். எந்திரத்தில் பணத்தை தவறவிட்டு சென்ற நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஏ.டி.எம். எந்திரத்தில் வெளிவந்த நிலையில் இருந்த பணத்தை மனிதாபிமானத்துடன் ஒப்படைத்த கல்லூரி பேராசிரியரை வங்கி ஊழியர்கள் மற்றும் போலீசார் பாராட்டினர்.
கல்லூரி பேராசிரியராக இருந்தாலும் செந்தில்வேலன் தனது ஓய்வு நேரத்தில் உறவினர் ஒருவரின் ஓட்டலில் சர்வராகவும், ஆட்டோ டிரைவராகவும் வேலை பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது.