போளூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயசுதா லட்சுமிகாந்தன் நியமனம்

போளூர் ஒன்றிய அ.தி.மு.க.செயலாளராக பணியாற்றிய முன்னாள் ஒன்றியக் குழு தலைவர் ஏ.ராஜன், கடந்த 2 ஆண்டுகளாக கட்சிப்பணியில் இருந்து ஒதுங்கி உள்ளார். அவருக்கு பதிலாக முன்னாள் எம்.எல்.ஏ.ஜெயசுதா லட்சுமிகாந்தன் ஒன்றிய மகளிர் அணி செயலாளராக உள்ளார்.

Update: 2018-08-04 22:30 GMT
போளூர்,

போளூர் ஒன்றிய அ.தி.மு.க.செயலாளராக பணியாற்றிய முன்னாள் ஒன்றியக் குழு தலைவர் ஏ.ராஜன், கடந்த 2 ஆண்டுகளாக கட்சிப்பணியில் இருந்து ஒதுங்கி உள்ளார். அவருக்கு பதிலாக புதிய ஒன்றிய செயலாளர் நியமிக்கப்பட வேண்டும் என்று அ.தி.மு.க.வினர் எதிர்பார்த்தனர். முன்னாள் எம்.எல்.ஏ.ஜெயசுதா லட்சுமிகாந்தன் ஒன்றிய மகளிர் அணி செயலாளராக உள்ளார். இந்த நிலையில் மாநில மகளிரணி துணை செயலாளராக நியமிக்கப்பட்ட அவரை, போளூர் ஒன்றிய செயலாளராக நியமித்து கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஜெயசுதா லட்சுமி காந்தன், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரான முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், வடக்கு மாவட்ட செயலாளர் தூசி கே.மோகன் எம்.எல்.ஏ., வி. பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர்கள் முக்கூர் சுப்பிரமணியன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். ஜெயசுதா லட்சுமிகாந்தனுக்கு கட்சியை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்