பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றால் ராணுவம் தடுத்து நிறுத்தும் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேட்டி
பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றால் ராணுவம் தடுத்து நிறுத்தும் என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றால் ராணுவம் தடுத்து நிறுத்தும் என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு விதானசவுதாவில் நேற்று மத்திய ராணுவத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
ராணுவம் தடுத்து நிறுத்தும்பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவதை ராணுவம் தடுத்து வருகிறது. இந்திய எல்லைக்குள் எப்போது பயங்கரவாதிகள் ஊடுருவினாலும், அதனை ராணுவம் தடுத்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து இன்னும் எத்தனை முறை பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்கு ஊடுருவ முயன்றாலும், அதனை ராணுவம் தடுத்து நிறுத்தும்.
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் உள்ள டோக்லாம் பிரச்சினையில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் பின்வாங்கி விட்டதாகவும், அந்த பிரச்சினையில் அவர் திடமான முடிவு எடுக்கவில்லை என்றும் ராகுல்காந்தி குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
தெளிவாக விளக்கம் அளித்துள்ளார்டோக்லாம் பிரச்சினையை இந்தியா, பூடான் தடுத்த நிறுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று அமெரிக்காவில் உள்ள செனட் உறுப்பினர் குற்றச்சாட்டு கூறி இருப்பது பற்றியும் ராகுல்காந்தி சுட்டி காட்டியுள்ளார். இந்த பிரச்சினையை நாடாளுமன்றத்தில் எழுப்பிய போது, வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தெளிவாக விளக்கம் அளித்துள்ளார். அவர் அளித்த விளக்கமே போதுமானதாகும். அதுபற்றி நான் மேலும் எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை.
வான்வழி தாக்குதலில் எதிரி நாட்டின் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை ரஷ்யாவிடம் இருந்து இந்திய ராணுவத்திற்கு வாங்குவது தொடர்பாக, அந்த நாட்டுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்த பேச்சு வார்த்தை தற்போது நிலுவையில் இருக்கிறது. கூடிய விரைவில் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.