நெம்மேலியில் வேன் மோதி பிளஸ்-2 மாணவர் பலி
நெம்மேலியில் வேன் மோதி பிளஸ்-2 மாணவர் பலியானார்.
மாமல்லபுரம்,
காஞ்சீபுரம் மாவட்டம், கூவத்தூரை அடுத்த பழைய நடுக்குப்பம் மீனவர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மகன் பிரவீன் (வயது17). மாமல்லபுரத்தை அடுத்த நெம்மேலிகுப்பத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி கோவளத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
நேற்று பள்ளியில் நடைபெற்ற சிறப்பு வகுப்புக்கு செல்ல நெம்மேலி கிழக்கு கடற்கரை சாலையை கடக்க முயன்றார். அப்போது மாமல்லபுரத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற வேன் ஒன்று பிரவீன் மீது மோதியது.
சாவு
இதில் சம்பவ இடத்திலேயே பிரவீன் பரிதாபமாக இறந்தார். மாணவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.