நீச்சல் குளத்தில் மூழ்கி சுற்றுலா பயணி சாவு
மாமல்லபுரத்தில் நீச்சல் குளத்தில் மூழ்கி சுற்றுலா பயணி இறந்தார்.;
மாமல்லபுரம்,
காஞ்சீபுரம் செவிலிமேடு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 42). வட்டிக்கு பணம் கொடுத்து வருபவர். தனது நண்பர்களுடன் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்த செல்வராஜ் அங்குள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து தங்கினார். விடுதி நீச்சல் குளத்தில் தாவி குதித்தபோது குளத்தில் மூழ்கி மயங்கினார். அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு மாமல்லபுரம் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.