கும்மிடிப்பூண்டி அருகே தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.20 ஆயிரம் பறிப்பு

கும்மிடிப்பூண்டி அருகே தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.20 ஆயிரம் பறித்துச்சென்ற 4 மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.;

Update:2018-08-05 01:56 IST
கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள திடீர் நகரை சேர்ந்தவர் லோகேஷ் (வயது 23). தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று முன்தினம் இரவு கும்மிடிப்பூண்டியில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் இருந்து ரூ.20 ஆயிரம் எடுத்துக்கொண்டு கும்மிடிப்பூண்டி சிப்காட் வழியாக மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.

குருவராஜகண்டிகை கிராமத்தின் உள்ள தரைப்பாலம் அருகே லோகேஷ் செல்லும்போது, பின்தொடர்ந்து 2 மோட்டார் சைக்களில் வந்த 4 மர்ம நபர்கள் அவரை வழிமறித்தனர்.

ரூ.20 ஆயிரம் பறிப்பு

மேற்கண்ட 4 பேரும் தங்களது முகத்தை துணியால் மூடி மறைத்து இருந்தனர். அவர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த உருட்டுக்கட்டை மற்றும் கத்தியால் லோகேசை மிரட்டி அவரிடம் இருந்த ரூ.20 ஆயிரத்தை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.

இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதயபிரகாஷ் தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்