என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி பிறந்த நாள் விழா கோலாகலம், தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர்
என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி பிறந்த நாள் விழாவை கோலாகலமாக கொண்டாடிய கட்சி தொண்டர்கள் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
புதுச்சேரி,
புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி நேற்று தனது பிறந்த நாள் விழாவை கொண்டாடினார். இதனை முன்னிட்டு நேற்று காலை 7 மணி முதலே திலாஸ்பேட்டையில் உள்ள அவரது வீட்டின் முன்பு தொண்டர்கள் குவியத் தொடங்கினர்.
காலை 8 மணியளவில் ரங்கசாமி தனது வீட்டில் உள்ள பூஜை அறையில் பூஜைகளை முடித்து விட்டு வெளியே வந்தார். பின்னர் அவர் மாடியில் உள்ள அறையில் தொண்டர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது தொண்டர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று அவருக்கு மாலை, சால்வை அணிவித்தும், பூங்கொத்து, பழங்கள் கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தனர்.
கட்சியின் பொதுச்செயலாளர் பாலன், எம்.எல்.ஏ.க்கள் என்.எஸ்.ஜே. ஜெயபால், அசோக் ஆனந்து, சுகுமாறன், முன்னாள் அமைச்சர் தேனீ. ஜெயக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. நேரு, முன்னாள் வாரிய தலைவர் பாலமுருகன், வர்த்தக சபை தலைவர் செண்பகராஜன், மகளிர் ஆணைய உறுப்பினர் ஜமீலா, மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டை உரிமையாளர் சங்க தலைவர் திருமால், சிவாஜி மன்ற தலைவர் மாயன், அரியாங்குப்பம் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் பாஸ்கர் என்கிற தட்சிணாமூர்த்தி மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
ரங்கசாமி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நேற்று காலை மணக்குள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தங்கத்தேர் இழுத்தனர். மதியம் 12 மணியளவில் கதிர்காமம் முருகன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜை நடந்தது. இதில் ரங்கசாமி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் அங்கிருந்து கோரிமேட்டில் உள்ள அப்பா பைத்தியசாமி கோவிலுக்கு சென்றார். அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு பக்தர் களுக்கு அன்னதானம் வழங்கினார்.
உருளையன்பேட்டை தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் மனித நேய மக்கள் சேவை இயக்கம், ஸ்ரீசுமதி அறக்கட்டளை சார்பில் இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடந்தது. மனித நேய மக்கள் சேவை இயக்கத்தின் தலை வரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான நேரு கலந்து கொண்டு ரத்ததான முகாமினை தொடங்கி வைத்தார். முகாமிற்கு தமிழ் தலைமை தாங்கினார். இதில் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர்கள் கலியன், ராமலிங்கம் உள்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.
இதே போல் புதுவை நகர் மற்றும் கிராமப்புறங்களில் பல்வேறு இடங்களிலும் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர்கள் ரங்கசாமியின் பிறந்த நாள் விழாவை கோலாகலமாக கொண்டாடினர். அப்போது அவர்கள் உணவுப்பொட்டலங்கள் வழங்கியும், மாணவர்களுக்கு எழுது பொருட்கள், நோட்டுபுத்தகங்கள் வழங்கியும் பிறந்த நாள் விழாவை கொண்டாடினர்.
மேலும் பல்வேறு பகுதிகளில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. ராஜீவ்காந்தி சிலையில் இருந்து அவரது வீடு வரை சாலையில் இரு புறமும் வாழ்த்து பேனர்கள், வரவேற்பு பேனர்கள், அலங்கார தோரணங்கள், வளைவுகள் கட்டப்பட்டு இருந்தன. ஆங்காங்கே இலவச மோர் வழங்கப்பட்டது. இந்த பகுதி முழுவதும் விழாக்கோலம் பூண்டது.
ஊசுடு தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் பத்துக்கண்ணு சந்திப்பில் நடந்த பிறந்த நாள் விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திகேயன் கலந்து கொண்டு கேக் வெட்டி கொண்டாடினார். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். பின்னர் அவர் அங்கிருந்து தொண்டர்களுடன் மோட்டார் சைக்கிள்களில் ஊர்வலமாக புறப்பட்டு திலாஸ்பேட்டையில் உள்ள ரங்கசாமியின் வீட்டிற்கு சென்றார். அங்கு அவர் ரங்கசாமிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்து என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் மீண்டும் இணைந்தார். காரைக்கால் நெடுங்காடு தொகுதியில் நடந்த விழாவில் தொகுதி எம்.எல்.ஏ. சந்திரபிரியங்கா கலந்து கொண்டு 500 பேருக்கு உணவுப்பொட்டலம் வழங்கினார்.