ஆறுமுகநேரியில் தீக்குளித்து பெண் தற்கொலை போலீசார் விசாரணை

ஆறுமுகநேரியில் தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2018-08-04 21:30 GMT
ஆறுமுகநேரி, 

ஆறுமுகநேரியில் தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-

கணவனை பிரிந்த பெண்

ஆறுமுகநேரி ராஜமன்யபுரத்தைச் சேர்ந்தவர் தாவீது மகள் சமாதானம் (வயது 42). இவருக்கும், மெஞ்ஞானபுரம் அருகே வேப்பங்காட்டைச் சேர்ந்த ஐஸ் வியாபாரி அந்தோணி ராஜிக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 4 மகன்கள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சமாதானம் தன்னுடைய கணவரை விட்டு பிரிந்து, தன்னுடைய குழந்தைகளுடன் ஆறுமுகநேரியில் உள்ள பெற்றோரின் வீட்டுக்கு சென்றார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக சமாதானத்துக்கு சற்று மனநிலை பாதிக்கப்பட்டது.

தீக்குளித்து தற்கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் சமாதானம் தனது வீட்டின் முன்பாக திடீரென்று தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் உடல் கருகி பலத்த காயம் அடைந்த அவரை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இரவில் சமாதானம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்