நெல்லையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நெல்லையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update: 2018-08-04 21:30 GMT
நெல்லை, 

நெல்லையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

நெல்லை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தாலுகா குழு உறுப்பினர் அசோக் தலைமை தாங்கினார். 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருவண்ணாமலையில் பிரசார பயணம் மேற்கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டவர்களை கைது செய்ததை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர் பாஸ்கரன் கூறும் போது, “சென்னையில் இருந்து சேலம் வரை 8 வழிச்சாலை திட்டத்தை அமல்படுத்துவதில் தமிழக அரசு அதிக அக்கறை காட்டி வருகிறது. இந்த திட்டத்துக்காக கருத்து கேட்பு முறையாக நடத்தப்படவில்லை. இந்த திட்டத்துக்கு ஏராளமான விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன. இதை நாங்கள் எதிர்க்கிறோம். இந்த திட்டத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பிரசார பயணம் மேற்கொண்ட எங்கள் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகளை போலீசார் கைது செய்துள்ளனர். விவசாயிகளை பாதிக்கும் 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும்“ என்றார்.

கோஷங்கள்

தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நெல்லை மாவட்ட செயற்குழு உறுப்பினர் மோகன், கட்சி நிர்வாகிகள் சுடலைராஜ், விண்ணமுத்து, பேரின்பராஜ், முருகன், கவுதம், பாலு, மாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்