பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் தி.மு.க.வில் இணைந்தனர்
மண்டபம் பேரூர் பகுதியை சேர்ந்த பல்வேறு கட்சிகளை சேர்ந்த ஏராளமானவர்கள் அந்தந்த கட்சியில் இருந்து விலகி தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் முன்னிலையில் தி.மு.க.வில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
பனைக்குளம்,
மண்டபம் பேரூர் பகுதியை சேர்ந்த பல்வேறு கட்சிகளை சேர்ந்த ஏராளமானவர்கள் அந்தந்த கட்சியில் இருந்து விலகி தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் முன்னிலையில் கமுதியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து தி.மு.க.வில் தங்களை இணைத்துக்கொண்டனர். அவர்களை மாவட்ட பொறுப்பாளர் மற்றும் நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர். நிகழ்ச்சியில் மண்டபம் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் ஜீவானந்தம், ராஜகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.