இளம்பெண்ணை கற்பழித்து கர்ப்பமாக்கிய நகைப்பட்டறை உரிமையாளருக்கு 7 ஆண்டு ஜெயில்
இளம்பெண்ணை கற்பழித்து கர்ப்பமாக்கிய நகைப்பட்டறை உரிமையாளருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
தானே,
இளம்பெண்ணை கற்பழித்து கர்ப்பமாக்கிய நகைப்பட்டறை உரிமையாளருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
இளம்பெண் கற்பழிப்பு
தானே மும்ராவை சேர்ந்தவர் சப்பிர் முலானி (வயது28). இவர் கவரிங் நகைகள் செய்யும் பட்டறை நடத்தி வந்தார். வீட்டில் இருக்கும் பெண்களை வைத்து, அவர் கவரிங் நகைகளை செய்து வந்தார். இந்தநிலையில், அவருக்கு கவரிங் நகைகள் செய்து கொடுத்து வந்த 17 வயது இளம்பெண்ணை கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் 20-ந்தேதி நகைகளை பேக்கிங் செய்து தரும்படி தனது பட்டறைக்கு அழைத்து உள்ளார்.
இதை நம்பி அங்கு வந்த இளம்பெண்ணை அவர் மிரட்டி கற்பழித்து உள்ளார். இதன் காரணமாக அந்த இளம்பெண் கர்ப்பம் ஆனார். 2 மாதத்துக்கு பின்னர் தான் இது இளம்பெண்ணுக்கு தெரியவந்தது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.
7 ஆண்டு ஜெயில்
சப்பிர் முலானிக்கு இளம்பெண் கர்ப்பமாக இருப்பது தெரியவந்ததை அடுத்து, அவர் மாத்திரையை கொடுத்து இளம்பெண்ணின் கர்ப்பத்தை கலைத்து உள்ளார்.
இதன்பின்னர் தான் சப்பிர் முலானி தங்களது மகளை கர்ப்பமாக்கியிருந்தது இளம்பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் சப்பிர் முலானி மீது போலீசில் புகார் கொடுத் தனர். போலீசார் சப்பிர் முலானியை கைது செய்து பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்கும் சிறப்பு கோர்ட் டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு விசாரணை நிறைவில், சப்பிர் முலானி மீதான கற்பழிப்பு மற்றும் கருவை கலைத்த குற்றச்சாட்டுகள் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டது.
இதையடுத்து தீர்ப்பு கூறிய கோர்ட்டு சப்பிர் முலானிக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.