வேலை கிடைக்காத விரக்தியில் மராத்தா வாலிபர் தற்கொலை சாலை மறியலால் பரபரப்பு
வேலை கிடைக்காத விரக்தியில் மராத்தா வாலிபர் தற்கொலை செய்துகொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த மராத்தா சமுதாயத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அவுரங்காபாத்,
வேலை கிடைக்காத விரக்தியில் மராத்தா வாலிபர் தற்கொலை செய்துகொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த மராத்தா சமுதாயத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வன்முறை
மராட்டிய மக்கள் தொகையில் 30 சதவீதம் கொண்ட மராத்தா சமுதாயத்தினர் தங்களுக்கு கல்வியிலும், வேலைவாய் ப்பிலும் 16 சதவீதம் இடஒதுக்கீடு தரவேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில் இவர்கள் நடத்திய போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. இதனால் நிலைமை தீவிரம் அடைந்தது. எனவே முதல்-மந்திரி பட்னாவிஸ் சிறப்பு சட்டசபை கூட்டி இட ஒதுக்கீடு அறிவிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். இதனால் நிலைமை சற்று சீரடைந்தது.
இருப்பினும் மாநிலத்தில் ஆங்காங்கே சிறிய அளவில் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன.
தொடரும் தற்கொலைகள்
அதுமட்டும் இன்றி மராத்தா சமுதாயத்தை சேர்ந்தவர்கள் இடஒதுகீடு கோரிக்கையை வலியுறுத்தி தற்கொலை செய்து கொள்வதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இதுவரை 6 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இந்தநிலையில் அவுரங் காபாத், சிக்கல்தானா பகுதியில் உள்ள சவுத்ரி காலனியில் வசித்து வந்த உமேஷ் அத்மராம் என்ற வாலிபர், நேற்று முன்தினம் தனது வீட்டில் துக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை கடிதம்
மேலும் வீட்டில் நடத்திய சோதனையில் அவர் எழுதி வைத்திருந்த தற்கொலை கடிதம் சிக்கியது. அதில், “என்னால் பெற்றோரின் கனவை நிறைவேற்ற முடிய வில்லை. பி.எஸ்.சி. பட்டப் படிப்பை முடித்தும் எனக்கு இன்னமும் வேலை கிடைக்கவில்லை. காரணம் நான் மராத்தா சமுதாயத்தை சேர்ந்தவன்” என்று எழுதி வைத்திருந்தார்.
இதுகுறித்த தகவல் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி மராத்தா போராட்ட க்காரர்கள் இடையே மேலும் கொந்தளிப்பை ஏற்படுத் தியது. இதையடுத்து அவுரங் காபாத்- ஜல்னா சாலையை அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்துபோக செய்தனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.