ஜோலார்பேட்டை அருகே ரெயிலில் இருந்து தவறி விழுந்து முன்னாள் ராணுவ வீரர் பலி
ஜோலார்பேட்டை அருகே ரெயிலில் இருந்து தவறி விழுந்து முன்னாள் ராணுவ வீரர் பலியானார்.
ஜோலார்பேட்டை,
நாட்டறம்பள்ளியை அடுத்த கே.பந்தாரப்பள்ளியை சேர்ந்தவர் தேவேந்திரன் (வயது 39), முன்னாள் ராணுவ வீரர். இவர் நேற்று முன்தினம் பெங்களூருவில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி ரெயிலில் பயணம் செய்தார்.
அந்த ரெயில் ஜோலார்பேட்டையை அடுத்த தாமலேரிமுத்தூர் ரெயில்வே கேட் அருகில் வந்து கொண்டிருந்தபோது, படிக்கட்டில் அமர்ந்திருந்த தேவேந்திரன் திடீரென தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.