உத்திரமேரூர் அருகே மோட்டார் சைக்கிளில் பாக்கெட் சாராயம் கடத்தியவர் கைது

மோட்டார் சைக்கிளில் பாக்கெட் சாராயம் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-08-03 22:21 GMT
உத்திரமேரூர், 

உத்திரமேரூரை அடுத்த படூர் கூட்ரோடு அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை மடக்கி அவரிடம் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குபின்முரணாக பதில் கூறினார்.

உடனே போலீசார் மோட்டார் சைக்கிளில் இருந்த பையை திறந்து பார்த்தனர். அப்போது அதில் சாராய பாக்கெட் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் சாராயத்தை கடத்தியது படூர் கிராமத்தை சேர்ந்த லோகு (42) என்பது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் லோகுவை கைது செய்து, அவரிடமிருந்து 5 லிட்டர் பாக்கெட் சாராயத்தையும், மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 

மேலும் செய்திகள்