மெட்ரோ ரெயிலில் அரசு பள்ளி மாணவர்கள் இலவச பயணம் சிறப்பு அம்சங்கள் குறித்து விளக்கம்
அரசு பள்ளி மாணவ, மாணவிகளை இலவச பயணம் செய்வதற்காக மெட்ரோ நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.;
சென்னை,
மெட்ரோ ரெயில் குறித்த விழிப்புணர்வை அரசு பள்ளி மாணவர்களிடம் ஏற்படுத்த கல்விச் சுற்றுலாவுக்கு சென்னை மெட்ரோ நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இதன் மூலம் சென்டிரல் மெட்ரோ-விமானநிலையம் மற்றும் சென்டிரல் மெட்ரோ-ஏ.ஜி.டி.எம்.எஸ். வரை அரசு பள்ளி மாணவ, மாணவிகளை இலவச பயணம் செய்வதற்காக மெட்ரோ நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக 2018-19-ம் கல்வியாண்டில் கடந்த ஜூலை மாதம் 9 ஆயிரத்து 375 மாணவ, மாணவிகள் கல்வி சுற்றுலாவாக இலவசமாக பயணம் செய்துள்ளனர். இந்த மாணவ, மாணவிகளுக்கு மெட்ரோ ரெயில் எவ்வாறு இயங்குகிறது, அதன் சிறப்பு அம்சங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் சுற்றுலாவின் போது விளக்கம் அளிக்கப்பட்டது.
கடந்த ஜூன் மாதம் 21-ந்தேதியில் இருந்து நேற்று வரை மொத்தம் 12 ஆயிரத்து 368 மாணவ, மாணவிகள் கல்வி சுற்றுலாவாக மெட்ரோ ரெயிலில் பயணம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.