சேலம்– சென்னை எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சென்னை–சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சார்பில் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2018-08-03 21:45 GMT

மதுரை,

சென்னை– சேலம் இடையே விவசாய நிலங்களை அழித்து மத்திய, மாநில அரசுகள் சார்பில் உருவாக்கப்படும் எட்டு வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவண்ணாமலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு சார்பில் நடைபயணம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தை கண்டித்தும், சென்னை–சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பகுதிகுழு செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மாநகர் மாவட்ட செயலாளர் விஜயராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜோதிராம், ராதா, கணேசன், நரசிம்மன் உள்ளிட்ட பலர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகள்