கோடியக்கரையில் மின்சாரம் தாக்கி மீனவர் பலி
கோடியக்கரையில் மின்சாரம் தாக்கி மீனவர் பலியானார்.
வேதாரண்யம்,
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரையை சேர்ந்தவர் சக்திவேல்(வயது55). மீனவர். இவர் நேற்று காலை 5 மணி அளவில் மீன்பிடிக்க செல்வதற்காக கடற்கரைக்கு சென்றார். அப்போது ஆடி காற்றில் அறுந்து விழுந்து கிடந்த மின்கம்பியை கவனிக்காமல் மிதித்து விட்டார். இதில் உடலில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே சக்திவேல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகவேல், தாசில்தார் சங்கர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சக்திவேல் உடலை கைப்பற்றி வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் சம்பவ இடத்துக்கு மின்வாரிய ஊழியர்கள் வந்து அறுந்துகிடந்த மின்கம்பியை சரிசெய்யும் பணியில் ஈட்டுள்ளனர். இறந்த சக்திவேலுக்கு ரேணுகாதேவி என்ற மனைவியும், தேவிகா என்ற மகளும், அருணகிரி என்ற மகனும் உள்ளனர். மின்சாரம் தாக்கி மீனவர் பலியான சம்பவம் கோடியக்கரையில் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.