வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் 20 வகையான சான்றிதழ்களை பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் 20 வகையான சான்றிதழ்களை பெற பொதுமக்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் 20 வகையான சான்றிதழ்களை பெற பொதுமக்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:–
சான்றிதழ்கள்தூத்துக்குடி மாவட்டத்தில் பொது சேவை மையங்கள் மூலம் வருவாய்த்துறையின் மூலம் வழங்கப்படும் 20 சான்றிதழ்கள், பட்டா மாறுதல், சமூகநலத்துறை சேவைகள் வழங்கப்படுகின்றன. தற்போது இந்த சான்றிதழ்கள் பெறுவதற்கான சேவைகளை பொதுமக்கள் தாங்களாகவே இணையதளத்தில் விண்ணப்பிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
மக்கள் பொதுசேவை மையங்கள் மூலம் வழங்கப்படும் சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் போன்ற 20 வகையான சான்றிதழ்களை பெறுவதற்கு https://www.tnesevai.tn.gov.in/citizen/ என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து பயன்பெறலாம்.
விண்ணப்பிக்கலாம்மேலும் UMANG என்னும் ஆன்ட்ராய்டு செயலி மூலமாகவும், பொதுமக்கள் சான்றிதழ்கள் பெற விண்ணப்பிக்கலாம். இதற்கான சேவை கட்டணமாக ரூ.60–ஐ இணையதள வங்கி அல்லது கிரெடிட், டெபிட், ரூபே கார்டுகள் மூலம் செலுத்தி பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.