தினம் ஒரு தகவல் : இரும்பில் தயாராகும் கட்டுமான கற்கள்
கட்டிடத்திற்கு உறுதி சேர்ப்பதில் முக்கியமானவை கற்கள்.
கட்டுமான கற்கள் தயாரிப்பில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. அப்படித் தயாராகும் கற்கள், இரும்பைப் போல் கடினமாக இருக்கும். சரி இதற்கு இரும்பையே பயன்படுத்தலாமே என வேடிக்கையாகத் தோன்றலாம். இப்போது இரும்பிலும் வந்துவிட்டன கற்கள். ஆம், இரும்பு உற்பத்தி ஆலை கழிவுகளைப் பயன்படுத்திக் கட்டுமான கற்கள் தயாரிக்கும் நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஏசிஎஸ் (ஏசிஎஸ் இண்டஸ்ட்ரியல் அண்ட் என்ஜினீயரிங் கெமிஸ்ட்ரி ரிசர்ச்) என்ற நிறுவனம் இந்த ஆய்வை மேற்கொண்டது.
ஐரோப்பிய நாடுகளில் உள்ள இரும்பு ஆலைகளில் இருந்து ஆண்டுக்கு பல லட்சம் டன் கழிவுகள் வெளியேறிக்கொண்டிருக்கின்றன. இந்த கழிவுகளை அகற்றுவது சிரமமான காரியமாக இருந்துள்ளது. இந்த கழிவை மறு சுழற்சி முறையில் பயன்படுத்த முடியுமா என ஆராய்ந்து பார்த்ததன் விளைவாக கட்டுமான கற்கள் தயாரிக்கலாம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரும்பு உற்பத்தி ஆலை கழிவுகளை வேல்ஜ் ஸ்லாக் என அழைப்பார்கள். இவை பாறை கற்களைப் போல் இருக்கும்.
இந்த கழிவில் இரும்புடன் சுண்ணாம்பும் கலந்து இருக்கிறது. சிலிகான் ஆக்ஸைடு, மாங்கனீஸ், காரீயம், துத்தநாகம் போன்ற உலோக ஆக்ஸைடுகளும் இதில் கலந்துள்ளன. இவ்வளவு வலுவான பொருட்கள் கலந்துள்ள இந்த கழிவை வெறுமே பள்ளங்களை நிரப்புவதற்காகவே பயன்படுத்திவந்தனர். ஆனால் இதை சிறந்த முறையில் பயன்படுத்தலாம் என்ற ஆராய்ச்சியின் முடிவில் தான் கட்டுமானப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இத்துடன் சில பொருட்களைச் சேர்த்து உறுதியான கற்கள் தயாரித்து வருகிறார்கள்.
மூலப் பொருட்களில் உள்ள சில நச்சுக்கள், தயாரிப்புப் பொருளிலும் இருப்பது விரும்பத்தக்கதல்ல. இருப்பினும் இந்த நச்சுக்களின் விகிதம் பரிந்துரைக்கப்படும் அளவிலேயே இருப்பதால் இவற்றை வீட்டு கட்டுமானத்திற்குப் பயன்படுத்தலாம் என்கின்றனர். கனமான சுவர்களுக்கு இந்த இரும்பு கற்கள் மிகப் பொருத்தமாக இருக்கும். இதை மறுசுழற்சி முறையில் செய்வதால், இதன் மூலம் சுற்றுச்சூழலும் மேம்படும் என்று சூழலியல் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். எனவே இனி வீடு கட்ட இத்தகைய கற்களை பயன்படுத்துவதே மிக நல்லது.