கடந்த ஆண்டில் மட்டும் மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ் மூலம் 3,600 பேருக்கு மருத்துவ உதவி மந்திரி தீபக் சாவந்த் தகவல்

மராட்டியத்தில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ் மூலம் 3 ஆயிரத்து 600 பேர் பயன் பெற்றுள்ளதாக மந்திரி தீபக் சாவந்த் தெரிவித்தார்.

Update: 2018-08-02 23:15 GMT
மும்பை, 

மராட்டியத்தில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ் மூலம் 3 ஆயிரத்து 600 பேர் பயன் பெற்றுள்ளதாக மந்திரி தீபக் சாவந்த் தெரிவித்தார்.

மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ்

மும்பையில் சாலை விபத்துகளின் போதும், அவசர காலத்தின்போதும் குறுகிய சாலைகள் வழியாக ஆம்புலன்சை இயக்குவது கடினமாகும்.

இதேபோல் போக்குவரத்து நெரிசல் அதிக கால தாமதத்தை ஏற்படுத்தியது. இதனால் விபத்து உயிரிழப்புகள் அதிகரித்தன. இந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்காக மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ் அறிமுகம் செய்யப்பட்டது.

விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சேவைகளை செய்து வருகிறது. மும்பையில் 20 மோட்டார் சைக்கிள் ஆம்புலன்சுகளும், பால்கர் மற்றும் மேல்காட் பகுதியில் தலா 5 மோட்டார் சைக்கிள் ஆம்புலன்சுகளும் இயக்கப்படுகிறது.

3,600 பேர்

இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ் மூலம் 3 ஆயிரத்து 600 பேருக்கு உரிய நேரத்தில் மருத்துவ உதவி கிடைத்துள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி தீபக் சாவந்த் தெரிவித்துள்ளார்.

இந்த ஆம்புலன்ஸ் மூலம் பயனடைந்தவர்களில் விபத்தில் சிக்கி காயமடைந்த 390 பேரும், 42 கர்ப்பிணி பெண்களும் அடங்குவர் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்