பெண்களுக்கு தனியாக வாக்குச்சாவடி அமைக்கவேண்டும் அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்
கலெக்டர் தலைமையில் நடந்த வாக்குச்சாவடி குறித்த கலந்தாய்வு கூட்டத்தில் பெண்களுக்கு தனியாக வாக்குச்சாவடிகள் அமைக்கவேண்டும் என்று அரசியல் கட்சியினர் வலியுறுத்தனர்.
புதுச்சேரி,
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி புதுச்சேரி மாவட்டத்தின் 25 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகள், வாக்காளர்களின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு இடமாற்றம், மறுசீரமைப்பு, புதிய வாக்குச்சாவடி உருவாக்குதல் மற்றும் பெயர் மாற்றம் போன்றவைகள் செய்யப்பட்டு உத்தேச வாக்குச்சாவடி விவரங்கள் பொதுமக்கள் பார்வைக்காக வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக பொதுமக்களின் கருத்துகளும், ஆட்சேபனைகளும் கேட்கப்பட்டது.
இதற்கான காலக்கெடு முடிவடைந்ததை தொடர்ந்து வாக்குச்சாவடி பட்டியலை இறுதி செய்வது தொடர்பாக புதுச்சேரி மாவட்டத்தின் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சி பிரதிநிதிகளின் கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
இந்த கூட்டத்துக்கு கலெக்டர் சவுத்ரி அபிஜித் விஜய் தலைமை தாங்கினார். துணை கலெக்டர் (தெற்கு) உதயகுமார், சிறப்பு அதிகாரி முத்துமீனா மற்றும் அதிகாரிகள் அரசியல் கட்சிகளின் கருத்துகளை கேட்டனர்.
தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. மூர்த்தி, நடராஜன், அ.தி.மு.க. சார்பில் அன்துவான் சூசை, இந்திய கம்யூனிஸ்டு சார்பில் கீதநாதன், பாரதீய ஜனதா சார்பில் சந்துரு மற்றும் பல்வேறு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு கருத்துகளை தெரிவித்தனர். குறிப்பாக வாக்காளர் எண்ணிக்கை அதிகமாக உள்ள வாக்குச்சாவடிகளில் பெண்களுக்கு என தனியாக வாக்குச்சாவடி அமைக்க வலியுறுத்தினார்கள். சில இடங்களில் உள்ள வாக்குச்சாவடிகளை இடமாற்றம் செய்யவும் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசியல் கட்சியினர் தெரிவித்த கருத்துகள், ஆட்சேபனைகளை உள்ளடக்கி உத்தேச வாக்குச்சாவடி பட்டியல் தயாரிக்கப்பட்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. ஒப்புதல் கிடைக்கப்பெற்றபின் இறுதி செய்யப்பட்ட வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்படும்.