புறவழிச்சாலை அமைக்க நிலத்தை அளவீடு செய்து அடையாள கற்கள் பதிக்கும் பணி தீவிரம்
திருக்காட்டுப்பள்ளியில் புறவழிச்சாலை அமைக்க நிலத்தை அளவீடு செய்து அடையாள கற்கள் பதிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருக்காட்டுப்பள்ளி,
தஞ்சை மாவட்டம் பூண்டி-செங்கரையூர் இடையே கொள்ளிடம் ஆற்றில் பாலம் கட்டப்பட்ட பின்னர் திருக்காட்டுப்பள்ளி வழியாக செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. தற்போது கல்லணையில் கொள்ளிடம் ஆற்றில் திருச்சி-தஞ்சை மாவட்டங்களை இணைக்கும் வகையில் பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பாலம் விரைவில் திறக்கப்பட உள்ளது. இதனால் திருக்காட்டுப்பள்ளியில் வாகன போக்குவரத்து மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
எனவே திருக்காட்டுப்பள்ளியில் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்கும் வகையில் புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
திருக்காட்டுப்பள்ளி-பழமார்நேரி சாலையில் உள்ள காவிரி ஆற்றின் புதிய பாலத்தில் இருந்து தொடங்கி கண்டியூர் செல்லும் சாலையில் மைக்கேல்பட்டியில் முடிவடையும் வகையில் 3.20 கிலோ மீட்டர் தூரம் இந்த புறவழிச்சாலை அமைய உள்ளது. புறவழிச்சாலை அமைப்பதற்கான நிலத்தை கையகப்படுத்த ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த நிலையில் புறவழிச்சாலை அமைக்க நிலத்தை அளவீடு செய்து அதில் அடையாள கற்கள் பதிக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
திருக்காட்டுப்பள்ளி, மைக்கேல்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று நிலத்தை அளவீடு செய்து அடையாள கற்கள் நடும் பணி நடந்தது. இதை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சரவணசெல்வம், உதவி கோட்ட பொறியாளர் முனீஸ்வரன், உதவி பொறியாளர் செல்வகுமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அடையாள கற்கள் பதிக்கும் பணியை தொடர்ந்து, நிலத்தின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்வார்கள் என்றும், இழப்பீடு வழங்கிய பின்னர் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.