வாய்க்கால்களை தூர்வாராததை கண்டித்து உண்ணாவிரதம் இருக்க முயன்ற விவசாயிகள் 22 பேர் கைது
நாச்சியார்கோவிலில், வாய்க்கால்களை தூர்வாராததை கண்டித்து உண்ணாவிரதம் இருக்க முயன்ற விவசாயிகள் 22 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவிடைமருதூர்,
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவிலில் ஆழியான் வாய்க்கால், கூத்தனூர் வாய்க்கால், நாச்சியார்கோவில் வாய்க்கால் ஆகிய 3 வாய்க்கால்கள் உள்ளன. இந்த வாய்க்கால்கள் மூலமாக அழகாபுத்தூர், கிருஷ்ணாபுரம், ஏனநல்லூர், திருநறையூர் உள்ளிட்ட கிராமங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்த வாய்க்கால்களை கல்லணை திறக்கப்படும் முன்பாக தூர்வார வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால் வாய்க்கால்கள் தூர்வாரப்படவில்லை.
அணை திறக்கப்பட்டு தண்ணீர் வந்த பின்னரும் வாய்க்கால்களை தூர்வாராததை கண்டித்து மக்கள் நலக்குழு சார்பில் நாச்சியார்கோவில் கடைவீதியில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று நாச்சியார்கோவிலில் மக்கள் நலக்குழுவை சேர்ந்த சாத்தையன் தலைமையில் விவசாயிகள் உண்ணாவிரதம் இருக்க முயன்றனர்.
அப்போது அங்கு வந்த போலீசார் உண்ணாவிரதம் இருக்க அனுமதி மறுத்தனர். இதையடுத்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் விவசாயிகள் 22 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.