ஆவடி ராணுவ தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா போர் விமானம் வெற்றிகரமாக விண்ணில் பறந்தது
சென்னை ஆவடி ராணுவ தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா போர் விமானம் வெற்றிகரமாக விண்ணில் பறந்தது.;
சென்னை,
மத்திய அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் சென்னை ஆவடியில் இயங்கி வரும் போர் ஊர்திகள் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஆவடி போர் ஊர்திகள் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தில் 2 டன் எடை பிரிவில் ‘ருஸ்டம்’(லேண்டிங் கியர்) ஆளில்லா போர் விமானம் தயாரிக்கப்பட்டது.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த விமானத்தின் சோதனை ஓட்டம் ‘ருஸ்டம்’ திட்ட இயக்குனர் அஷோக் ரங்கன், கூடுதல் இயக்குனர்கள் டாக்டர் வி பாலமுருகன், டி.கே. தத்தா முன்னிலையில் கர்நாடக மாநிலம் சித்ராதுர்காவில் நடைபெற்றது. அதி மற்றும் மிக வேக சோதனைகள் மூலம் ஆளில்லா போர் விமானம் வெற்றிகரமாக வானில் பறந்தது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.