மரணம் அடைந்த திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. போஸ் உடலுக்கு எடப்பாடி பழனிசாமி அஞ்சலி
மரணம் அடைந்த மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ் உடலுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று அஞ்சலி செலுத்தினார்கள். பல்வேறு அரசியல் கட்சியினரும் அனுதாபம் தெரிவித்தனர்.
மதுரை,
மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. உறுப்பினர் ஏ.கே.போஸ் (வயது 68). இவர் மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். சமீப காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த அவர், சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சில மாதங்களுக்கு முன்பு காலில் ஆபரேஷன் செய்து கொண்டார்.
அதன்பின்பு அவர் மதுரை திரும்பி தொடர் சிகிச்சை பெற்று வந்தார். அதனால் அவரால் சட்டமன்ற பட்ஜெட் கூட்ட தொடரில் கலந்து கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் ஏ.கே.போசுக்கு சில தினங்களுக்கு முன்பு மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் மாலையில், பைபாஸ் ரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு எக்கோ, இ.சி.ஜி உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன. எனவே இரவில் ஆஸ்பத்திரியிலேயே தங்கினார். நள்ளிரவு 12 மணி அளவில் அவருக்கு வாந்தி ஏற்பட்டதுடன் சற்று நேரத்தில் அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. உடனே டாக்டரை அழைத்து பரிசோதித்து பார்த்த போது, ஏ.கே.போஸ் மாரடைப்பால் இறந்துவிட்டது தெரியவந்தது.
அதை தொடர்ந்து ஏ.கே.போஸ் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது. நேற்று காலை முதல் ஏராளமான அ.தி.மு.க. தொண்டர்களும், பல்வேறு கட்சிகளின் பிரமுகர்களும் வந்து அஞ்சலி செலுத்திய வண்ணம் இருந்தனர்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தனர். பின்னர் அவர்கள் அவரது இல்லத்திற்கு சென்று ஏ.கே.போஸ் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். அப்போது ஏ.கே.போசின் மனைவி பாக்கியலட்சுமி, மகன்கள் ஏ.கே.சிவசுப்பிரமணியம், சங்கர் மற்றும் 2 மகள்களிடம் ஆறுதல் தெரிவித்தனர்.
அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், காமராஜ், எம்.ஆர்.விஜயபாஸ்கர், எம்.எல்.ஏ.க்கள் ராஜன்செல்லப்பா, பெரியபுள்ளான், மாணிக்கம், நீதிபதி, சரவணன், மதுரை கலெக்டர் வீரராகவராவ், போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம், மாநகராட்சி ஆணையாளர் அனீஷ்சேகர், அ.தி.மு.க. நிர்வாகிகள் வெற்றிவேல், அய்யப்பன், ஐ.பி.எஸ்.பாலமுருகன், தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி, மூர்த்தி எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர் தளபதி, மருத்துவரணி துணைச்செயலாளர் டாக்டர் சரவணன்.
பா.ஜ.க. சார்பில் மாநில செயலாளர் சீனிவாசன், அ.ம.மு.க. சார்பில் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன், மதுரை மாவட்ட செயலாளர்கள் ஜெயபால், மகேந்திரன் உள்பட பல்வேறு கட்சியினர் ஏ.கே.போஸ் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி தங்களின் அனுதாபத்தை தெரிவித்தனர்.
பொதுமக்களின் அஞ்சலிக்கு பின்னர் அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு மதுரை கீரைத்துறையில் உள்ள மயானத்தில் நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது.
எம்.ஜி.ஆர். கட்சியை தொடங்கிய காலத்தில் இருந்தே ஏ.கே.போஸ் தன்னை அ.தி.மு.க.வில் இணைத்து கொண்டார். அப்போது அவர் எம்.ஜி.ஆர்.தொண்டர் படை, மதுரை மாநகர அவைத்தலைவர், மாநகர இணைச்செயலாளர், மாநகர செயலாளர் என பல்வேறு பதவிகளை வகித்தார். இவர் பஸ் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். ஜெயலலிதாவின் நன்மதிப்பை பெற்ற ஏ.கே.போஸ் கடந்த 2004-ம் ஆண்டு மதுரை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதன்பின்னர் மீண்டும் அவருக்கு ஜெயலலிதா 2006-ல் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்தார். அதில் வெற்றி பெற்று முதல் முறையாக சட்டசபைக்குள் நுழைந்தார். அப்போது 2007-ம் ஆண்டு தி.மு.க. தலைவர் கருணாநிதி வாசித்த பட்ஜெட்டுக்கு ஜெயலலிதா முன்னிலையில் எதிர்ப்பு தெரிவித்தார்.
பின்னர் அவரிடமிருந்து பட்ஜெட் நகலை கிழித்து எறிந்தார். எனவே அவரை சபாநாயகர் சட்டசபையில் கலந்து கொள்ள கூடாது என்று கூறி இடைநீக்கம் செய்தார். அப்போது சபை காவலர் தொப்பியை எடுத்து சபாநாயகர் மேஜை மீது வீசி எறிந்தது குறிப்பிடத்தக்கது. 2011-ம் ஆண்டு மீண்டும் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அப்போது மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை. அப்போது திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற சீனிவேல் தேர்தல் முடிவு வெளிவருவதற்கு முன்பே மரணம் அடைந்ததால் அந்த தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் ஏ.கே.போஸ் நிறுத்தப்பட்டார். அப்போது தேர்தல் சின்னம் தொடர் பான விண்ணப்பத்தில் ஜெயலலிதாவின் கைரேகை பதிவு செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த தேர்தலில் ஏ.கே.போஸ் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணனை விட அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ் மரணத்துக்கு மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.