திருச்சியில் நள்ளிரவில் துணிகரம் பள்ளி தாளாளர் வீட்டில் 46 பவுன் நகைகள், ரூ.1¼ லட்சம் கொள்ளை
திருச்சியில் நள்ளிரவு பள்ளி தாளாளர் வீட்டில் 46 பவுன் நகைகள் மற்றும் ரூ.1¼ லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
திருச்சி,
திருச்சி வயலூர்ரோடு சீனிவாசநகர் 5-வது மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் திருமுருகன்(வயது 35). இவர் அதே பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியின் தாளாளராக உள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் கீழ் தளத்தை பூட்டிவிட்டு குடும்பத்துடன் மாடிக்கு சென்று தூங்கினார். அப்போது நள்ளிரவில் அவரது வீட்டின் பின்பக்க கதவில் இருந்த பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்தனர். அவர்கள் வீட்டின் படுக்கை அறைக்கு சென்று, அங்கிருந்த பீரோவை திறந்து லாக்கரை உடைத்து அதில் இருந்து 46 பவுன் தங்க நகைகள், ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர்.
நேற்று காலை 6.30 மணி அளவில் திருமுருகன் மாடியில் இருந்து இறங்கி கீழ் தளத்துக்கு வந்தார். வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றதும், அங்கு பின்பக்க கதவு திறந்து கிடந்ததை பார்த்தார். உடனே படுக்கை அறைக்கு சென்றார். அங்கு பீரோ திறந்து கிடந்ததோடு துணிகளும் சிதறி கிடந்தன. பீரோ லாக்கர் உடைக்கப்பட்டு நகைகள் மற்றும் பணம் கொள்ளை போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே இது குறித்து அரசு மருத்துவமனை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். விரல்ரேகை நிபுணர்களும் வந்து சோதனையிட்டனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.