நீலகிரி வனப்பகுதிகளில் மரபியல் குறைபாட்டால் பாதிக்கப்படும் வனவிலங்குகள்
நீலகிரி வனப்பகுதிகளில் மரபியல் குறைபாட்டால் வனவிலங்குகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதனை தடுக்க வனத்துறை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மசினகுடி,
தமிழ்நாட்டில் அதிக வனப்பகுதியை கொண்டுள்ள மாவட்டம், நீலகிரி ஆகும். மேற்கு தொடர்ச்சி மலையும், கிழக்கு தொடர்ச்சி மலையும் சந்திக்கும் இடமாக இது உள்ளது. உயிர்சூழல் மண்டலத்தில் முக்கிய பங்கு வகிக்கும் நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகம், முக்குருத்தி தேசிய பூங்கா அமைந்துள்ளது. நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் கடந்த 2014-ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி 150-க்கும் மேற்பட்ட புலிகள், 250-க்கும் மேற்பட்ட சிறுத்தைகள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. மேலும் இந்த வனப்பகுதிகளில் மான், காட்டெருமை, காட்டுயானை போன்றவற்றை எளிதில் காண முடியும். ஆனால் புலி, சிறுத்தை, செந்நாய், கரடி போன்றவைகளை காண்பது மிக அரிதாக இருந்து வந்தது. ஆனால் தற்போது எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால் புலி, சிறுத்தைகளை காண்பது எளிதாகி விட்டது.
இது வனத்துறை மற்றும் வன உயிரின ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும், ஒரு கவலையும் தொற்றி கொண்டுள்ளது. அதற்கு காரணம் புலி, சிறுத்தை, காட்டெருமை, மான் போன்றவை வழக்கத்தை விட வேறு நிறத்தில் காணப்படுவது தான். அதாவது சிறுத்தைகள் கருப்பு நிறத்திலும், புலிகள் வெள்ளை நிறத்திலும் உள்ளன. இந்த நிலையில் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் 4 கருஞ்சிறுத்தைகள் சுற்றித்திரிவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மசினகுடி வனப்பகுதியில் பெண் சிறுத்தைக்கு ஒரே சமயத்தில் பிறந்த 2 குட்டிகளில் ஒன்று வழக்கமான நிறத்துடனும், மற்றொன்று கருப்பு நிறத்திலும் இருந்ததாக வனத்துறையினர் கூறுகின்றனர். மொத்தமாக நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட கருஞ்சிறுத்தைகள் சுற்றித்திரிவதாக தெரியவந்துள்ளது.
இதேபோன்று அவலாஞ்சி வனப்பகுதியில் கடந்த ஆண்டு வெள்ளை புலி ஒன்று காணப்பட்டது. அதனை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். அப்போது 18 இடங்களில் நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. அதில் 2 வெள்ளை புலிகள் உள்பட 4 புலிகள் கூட்டாக சுற்றித்திரிவது பதிவாகி இருந்தது. மேலும் தெங்குமரஹாடா வனப்பகுதியில் ஒரு காட்டெருமையும், மாயார் வனப்பகுதியில் புள்ளி மானும் வெளிர் நிறத்தில் காணப்பட்டன. இதற்கு காரணம் நீலகிரி மாவட்ட வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகளுக்கு மரபியல் குறைபாடு அதிகரித்து வருவது தான் என தெரியவந்துள்ளது. இதுகுறித்து உதகை அரசு கல்லூரியின் வன உயிரியல் துறை பேராசிரியரும், வனவிலங்கு ஆராய்ச்சியாளருமான ராமகிருஷ்ணன் கூறியதாவது:-
நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் வெள்ளை புலிகள் கிடையாது. மரபியல் குறைபாடு காரணமாகவே புலிகள் வெள்ளை நிறத்தில் காணப்படுகின்றன. வனத்தின் ஒரு பகுதி துண்டிக்கப்படும்போது, ஒரே குடும்பத்திற்குள் மீண்டும் இனப்பெருக்கம் செய்வதால் வனவிலங்குகளுக்கு மரபியல் குறைபாடு ஏற்படுகிறது.
மரபியல் குறைபாட்டால் வெள்ளை நிறத்தில் குட்டிகள் பிறந்தால் அதை அல்பனீசம் என்றும், கருப்பு நிறத்தில் குட்டிகள் பிறந்தால் அதை மெலனீசம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். இதுபோன்று மரபியல் குறைபாட்டுடன் வனவிலங்குகள் பிறப்பது அதிகரிக்கக்கூடாது. இதனை தடுக்க தேவையான நடவடிக்கைகளை வனத்துறை உடனே எடுக்க வேண்டும். இல்லையென்றால் எளிதில் நோய் தாக்குதலுக்கும் ஆளாவதோடு, மாமிசம் உண்ணும் விலங்குகள் வேட்டையாட முடியாத நிலை ஏற்படலாம். இதனால் வனவிலங்குகளின் எண்ணிக்கையும் குறைய வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.